சென்ற ஆண்டு தீபாவளி அன்று வெளியான சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீசை தொட்டாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை. அதனால் ரஜினி மற்றும் படக்குழுவிற்கு சிறிது வருத்தம் தான்.
அதனால் அதிரடியாக யோசித்த ரஜினி தற்போது ட்ரெண்டில் உள்ள இயக்குனர் நெல்சனுக்கு, அதிரடியாக வாய்ப்பைக் கொடுத்தார்.
தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்குகிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற அட்டகாசமான அறிவிப்பு சென்ற வாரம் வெளிவந்தது.இந்த படத்தை வைத்து பழைய மார்க்கெட்டை பிடிக்க வேண்டுமென்று, ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. அதற்காக அவர் அமைத்த வியூகம் ஹீரோயின் செலக்சன். ரஜினியின் வயதை வைத்து பார்த்தால், அவருக்கு ஏற்ற ஹீரோயின் பாலிவுட்டின் ஐஸ்வர்யா ராய் தான்.
ஐஸ்வர்யா ராய் என்றால் பட்ஜெட் எகிறும் என சிந்தித்த சன் பிக்சர்ஸ் ரஜினியிடம் அதிரடியாக ஒரு ஒப்பந்தம் போட்டது.ரஜினி என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் சன் பிக்சர்ஸ், அவரது மார்க்கெட் கொஞ்சம் இறங்கியதால், இந்த முறை விடாப்பிடியான தீர்மானம் எடுத்துள்ளது.
அதாவது, ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்றால் உங்கள் சம்பளத்தை 20 கோடி குறைத்துக் கொள்ளுங்கள், அப்போதுதான் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என ரஜினியிடம் கூறியுள்ளது.
சன் பிக்சர்சின் இந்த முடிவை ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த். சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் ஆனால் வரும் லாபத்தில் ஒரு சிறிதளவு பங்கு வேண்டும் என கேட்டுள்ளார். இறுதியில் ரஜினியின் சம்பளம் 80 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு ஏரியாவிற்கும் பங்குகொடுக்க வேண்டும் என்று ரஜினி கேட்டுள்ளார். இதற்கு சன் பிக்சர்ஸும் ஒத்துக் கொண்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒத்துக் கொண்டாள் தற்போது ரஜினி வாங்கும் சம்பளத்தை விட 50 கோடி அதிகமாக லாபம் கிடைக்குமாம்.
படம் நன்றாக ஓடினால் கிட்டத்தட்ட 130 கோடி வரை வசூல் செய்யலாம் என்பது ரஜினி போட்ட கணக்கு. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் அடுத்த வருட பொங்கலுக்கு இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் நெல்சன், தற்போது வைத்துள்ள பட வேலைகளை முடித்துவிட்டு தான் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார். அதேபோல் ரஜினிக்கு தற்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் முடிவுக்குக் கொண்டு வருகிறாராம்.