கல்யாணம் முடிந்தவுடன் சினிமா வாழ்க்கையை தள்ளி வைக்கும் நயன்தாரா – ஏன் இந்த அதிரடி முடிவு தெரியுமா?

8 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து தற்போது இணையவுள்ள ஜோடி தான் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் விக்னேஷ் சிவனின் ஜோடி. வருகிற ஜூன் 9ஆம் தேதி இந்த தம்பதி மணமுடிக்கவுள்ளனர். முன்னதாக திருப்பதி கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணத்தால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் தற்போது நடக்கவுள்ளது.

தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் இவர்களின் திருமணத்திற்கு கட்டாயம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், நடிகர் அஜித்தின் AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் அஜித் கட்டாயம் வருவார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர்.

திருமணம் முடிந்த கையேடு நடிகை நயன்தாரா கேரளா மாநிலத்திற்கு சிகிச்சை ஒன்றிற்காக செல்லவுள்ளாராம். இவருக்கு தற்போது 36 வயதான நிலையில் தனது சுருக்கமான சருமத்தை சரி செய்வதற்காகவும். அடிக்கடி அவர் கருத்தடை மாத்திரை பயன்படுத்தியதால் அவரின் கர்ப்பப்பையில் சில பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். அதனால் கேரளாவிலுள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் ஆறு மாத காலம் தங்கி இவ்விரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவுள்ளாராம். அதன் பின்பு, ஹனி மூன் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

மேலும், சிகிச்சைக்காக செல்லும் இவர் சிகிச்சை காலம் முடியும் வரை எந்த படத்திலும் கம்மிட் ஆகவில்லை. அதன் பின்பு அவர் பிரசவித்தால் அவரின் சினிமா வாழ்க்கை தொடருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த விஷயத்தை அறிந்த நயன்தாராவின் ரசிகர்கள் ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும், எங்கள் தலைவி நயன்தாரா நன்றாக இருந்தால் போதுமென வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *