சிவ கார்த்திகேயன் தயாரிப்பில் , KJR ஸ்டுடியோஸ் வழங்கும் படம் டாக்டர்.
சிவ கார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய், யோகி பாபு, ரெடின்,அர்ச்சனா, தீபா, அருண் அலெக்சாண்டர், சுனில் ரெட்டி, இளவரசு என பெரிய காமெடி பட்டாளங்களின் நடிப்பில், அனிருத் இசையில், நெல்சன் இயக்கத்தில், கலகலப்பான படம்.
குழந்தை கடத்தலை மையமாக கொண்டு அமைந்த இந்த கதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் நகரும்.
ராணுவத்தில் மருத்துவராக இருக்கும் நம் கதாநாயகன், தனது காதலியின் அண்ணன் மகள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பாத வேளையில் அவள் கடத்த பட்டதை உறுதிசெய்து, அலட்சியம் காட்டும் போலீசை நம்பாமல், தானாக குடும்பத்துடன் சேர்ந்து கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்தார்களா, எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது கதை.
நகைச்சுவையான வசனங்கள்,திரைக்கதை, கதைக்கு ஏற்ற நடிகர்கள் என அசத்தலாக இயக்கியுள்ளார் நெல்சன்.
வழக்கம் போல துள்ளல் இசையில் அனிருத், நம்மை நடிப்பில் மட்டும் இல்லாமல் பாடலாசிரியராக அருமையான பாடல் வரிகள் மூலம் நம்மை பூர்த்தி செய்துள்ளார் சிவ கார்த்திகேயன்.
வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரத்தை குறைந்த வசனங்கள் மூலம் ரசிக்கும் வகையில் நம்மை வியத்திருக்கிறார் சிவ கார்த்திகேயன், முதல் படம் போல் நடிக்கவில்லை ப்ரியங்கா மோகன்.
டோனி என்னும் கதாபாத்திரம் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்து அந்த எதிர்பார்ப்பை, பகத் எனக்கும் கதாபாத்திரம் மூலமாகவும் நிறைவு செய்துருக்குறார் ரெடின்.
செண்டிமெண்ட் மட்டும் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியாக நடித்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார் தீபா.
சொல்லவே வேண்டியதில்லை யோகி பாபுவின் கவுண்டர் மற்றும் நகைச்சுவையை பற்றி, கதையில் அவர் நுழைந்த காட்சிமுதல், படத்தின் இறுதிவரை வயிறு குலுங்க குலுங்க சிரிக்கவைத்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அர்ச்சனாவின் மகள் சாரா வினீத், தான் வந்த காட்சிகளை நிறைவுசெய்திருக்கிறார், படத்திலும் அம்மாவாக அர்ச்சனா கட்சிதமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதுவரை பார்த்தது போல் இல்லாமல் ஒரு நகைச்சுவையை தாண்டி ஒரு சீரியஸ் ஆன கதாபாத்திரத்தில் அருண் அலெக்ஸாண்டரும் பூர்த்தி செய்துள்ளார்.
மிரட்டலான நடிப்பில் வசனத்தில், உடல் பாவனையில் கலக்கியுள்ளார் வினய்.
படத்திற்கு தேவையான நடிப்பில் இளவரசு, மிலிண்ட் சோமன், ஷாஜி சென், ரகுராம் கலக்கியுள்ளார்.
படத்திற்கு கூடுதல் பக்கபலமாக இருப்பது, காட்சியமைத்தல், படத்தின் ஒளிப்பதிவு அருமை, விஜய் கார்த்திக் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
கலை இயக்கினராக பிரம்மிக்க வைத்துள்ளார் கிரண்.
நிர்மல் எடிட்டிங்ல் எங்கும் சொதப்பல் இல்லை.
பல்லவி சிங்க் அவர்களின் ஆடை வடிவமைப்பு அற்புதம்.
ரசிக்க வைக்கும் சண்டைக்காட்சிகள், ஒரு ஒரு சண்டையும் அசத்தளாக இயக்கியுள்ளார் அன்பரிவு, குறிப்பாக மெட்ரோ ரயிலில் வரும் சண்டை.
ஒரு சில இடங்களில் சொதப்பல்கள் இருந்தாலும் ஆரம்பம் முதல் நிறைவு வரை கலகலப்பு தான் டாக்டர்.
இந்த படத்தின் மூலம் அடுத்தப்படத்தின் (பீஸ்ட்) எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார் நெல்சன்.
டாக்டர் – நகைச்சுவை மருந்தை அளித்திருக்கிறார்.
-நிதீஷ்