தனுஷுடன் நடிக்க மறுத்த நடிகைகள்; சிக்கலிலுள்ள பிரபல தயாரிப்பாளர்;
தனுஷ் தன் கையிலுள்ள நானே வருவேன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்திற்கு பின், தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்து அவர் இயக்கும் படத்திற்கு அவரே நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது, நடிகர் தனுஷ், தனது முன்னாள் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ததற்கு பின் தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் சரமாரியாக சரிந்துள்ளது. இச்சரிவிற்கு தொடர் தோல்வி படங்களும் ஓடிடி ரீலீசும் முக்கிய காரணம். தனுஷ் எந்த ஒரு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து படங்களை கொடுப்பதில்லை என்று கோலிவுட்டில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரிப்பில் உருவாக உள்ள இத்திரைப்படத்திற்கு முதன்முதலாக, கதாநாயகியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும், பாலிவுட்டின் நடிகை ஜான்வி கபூர் அணுகியுள்ளார் தனுஷ். ஆனால் அதற்கு போனிகபூர் என் மகளை உன்னுடன் நடிக்க வைக்க மாட்டேன் என தெரிவித்து தனுஷை அவமானப்படுத்தியுள்ளார்.
மேலும் டான் மற்றும் டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பிரியங்கா மோகனிடம் தனுஷ் அணுகியபோது, சிவகார்த்திகேயன் நடுவில் புகுந்து நீங்கள் தற்போது தான் சினிமாவில் வளர்ந்து வருகிறீர்கள், இப்போது தனுஷூடன் நடித்தால் உங்களது மார்க்கெட் சரிந்து விடும் என பிரியங்கா மோகனிடம் மூளைச்சலவை செய்துள்ளார். பிரியங்கா மோகன் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் தனுஷ் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டியை, தான் இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க அணுகியுள்ளார். தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள “வணங்கான்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாலா மற்றும் சூர்யாவின் கருத்துவேறுபாடால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கீர்த்தி ஷெட்டி தனுஷுடன் முதல்முதலாக தமிழில் நடிக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம். மேலும் எந்த ஒரு முன்னணி நடிகையும் நடிக்க முன்வராமல் இருப்பது, தனுஷின் மார்க்கெட் மேலும் சரிந்துவருகிறது.
மேலும், சில தினங்களாக நடந்துக் கொண்டிருக்கும் ஐ டி ரெய்டில் தயாரிப்பாளர் அன்பு செழியனின் அலுவலகதிலும் ரெய்டு நடத்தப்படுவதால் தனுஷ் இயக்கத்திலான இப்படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.