‘Demon’ படத்தின் முதல் பார்வை!!!

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர். தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.

‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ‘Demon’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அபர்நதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பால்’ இணையத்தொடரிலும் அபர்நிதியின் நடிப்பிற்கு சிறந்த விமர்சனங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திகைப்பூட்டும் திரைக்கதை மற்றும் புதிய விசித்திரமான காட்சி அமைப்புடன் கூடிய ‘Demon’, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை விரைவில் வழங்கவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் பல அறிமுக இயக்குநர்களுடன் படங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளது, இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *