கொரோனா வராமல் தடுக்க அஜித்தின் ஆலோசனையில் தக்ஷா செய்யும் காரியம்
நடிகர் அஜித் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பே பைக் ரேஸராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். நடிப்புக்கு வந்த பிறகும் சர்வதேச அளவில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டார். F1 வரை முன்னேறினார். அதன் பிறகும் ட்ரோன் டாக்ஸி என்ற ஆளில்லா பறக்கும் விமானத்தை வடிவமைக்கும் தக்ஷா அமைப்பிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இன்று உலகம் முழுக்க இருக்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் மிக வேகமாக பரவி வருகிறது, இதனை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது 21 நாட்கள் 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், காற்றின் மூலமும் வீட்டினுள் இருப்பவர்களையும் இந்த வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதால், தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து தெருக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்கள் அனைத்திலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க, அஜித்தின் ஆலோசனையின் பேரில் வடிவமைத்த டிரோன் டாக்ஸி மூலம் கிருமி நாசினியை தெளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று (26.03.2020) சோதனை ஓட்டம் நடைபெற்றது.