ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமல்… என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது..?

ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமல்… என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது..?

* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணி மற்றும் சாலை பணிகளுக்கு தடையில்லை.

* ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், 25 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

* ஐ.டி நிறுவனங்களும் 10 சதவீத பணியாளர்கள், அதாவது குறைந்தபட்சம் 20 பணியாளர்களுடன் இயங்கலாம்.

* அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* முடி திருத்தகங்கள், அழகு நிலையங்களை தவிர, ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

* பிளம்பர், எலக்டிரிஷியன், தச்சர் உள்ளிட்டோர்களுக்கு ஆட்சியரிடம் அனுமதி பெற்று செயல்டலாம்.

* சென்னையை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகளில், 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளித்துறை உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளில் மட்டும், ஆட்சியர் ஆய்வு செய்து அனுமதி அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

* ஊரகம் மற்றும் நகர்ப்பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களோடு தொழிற்பேட்டைகள் இயங்கலாம்.

* நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆட்சியர் ஆய்வு செய்த பிறகு, சூழ்நிலைக்கேற்ப அனுமதி தரப்படும்.

* கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் செயல்பட அனுமதி உண்டு.

* ஐ.டி நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கும், கட்டுமான பணிக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், மின்சாதன கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்படலாம்.

* கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.

* மொபைல் போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் செயல்படலாம்.

* உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகளும் மாவட்ட சூழலுக்கேற்ப அனுமதிக்கலாம்.

*nஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்ட வேளாண், மருத்துவம் சார்ந்த பணிகள், அம்மா உணவகங்கள், வங்கிகள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்படுவதற்கு தடையில்லை.

* அதேசமயம், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

* சுற்றுலா தலங்கள், நீச்சல் குளங்கள், பெரிய விளையாட்டு அரங்குகளும் செயல்படக் கூடாது.

* அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளன.

* விமானம், ரயில், பொது போக்குவரத்து, டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து உள்ளிட்டவை செயல்படாது.

* தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்களுக்கும் தடை உள்ளது.

* இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த்தொற்று கட்டுப்பாடு (containment zone) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கண்ட தளர்வுகள் பொருந்தாது என்று தெளிவாக அரசு விளக்கியுள்ளது.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *