*’நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு’*
*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.*
*ஜூன் எட்டாம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ஷாப்பிங் மால்கள் உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.*
*ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.*
*தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.*
*தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.*
*வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி.*
*அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்கலாம் – ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கலாம்.*
*முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.*
*பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.*
*கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.*
*அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.*
*திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.*
*பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.*
*சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.*
*இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.*
*தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.*
*மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.*
*சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.*