விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, மிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், மியா ஜார்ஜ், ஆனந்த் ராஜ், இர்பான் பதான் மற்றும் பலர் நடிப்பில், செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் “கோப்ரா”. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு பின் சீயான் விக்ரமின் படம் திரைக்கு இன்று வந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று இன்று வெளியாகியுள்ள “கோப்ரா” படத்தின் விமர்சனம் இப்போது வாசிக்கலாம்.
கதைப்படி..,
பல வேடங்கள் அணிந்து பல நாடுகளுக்கு சென்று, முதலமைச்சர், ஸ்காட்லாந்து அரசர், பாதுகாப்பு அமைச்சர் என முக்கிய புள்ளிகளை குறிவைத்து தூக்குகிறார் மதி(விக்ரம்). இந்தக் கொலைகளை பற்றி கண்டறியும் இன்டர்போல் ஆபிஸராக வருகிறார் இர்பான் பதான்.
கொலையாளி யார் என்று தெரியாமல், அவர் ஒரு கணித மேதாவி என்ற துப்புக்களை வைத்து மட்டும் பல கணக்கு போடுகிறார் இர்பான். பின்பு மதியை காட்டிக் கொடுக்க ஹேக்கர் ஒருவர் இன்டர்போலுக்கு பல தகவல்கள் தருகிறார். அந்த ஹேக்கர் யார்? எதற்காக இதனை கொலைகளை நாயகன் செய்கிறார்? இர்பானிடம் மதி சிக்கினாரா? என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இரண்டாம் பாதி…
விக்ரமின் நடிப்பும், படத்திற்கான அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. வித்யாசமான பல கெட்டப்புகள், அதற்குண்டான உடல் மொழிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. “ஐ”யோ… அந்நியனோ… அதுக்கும் மேல….
ஸ்ரீநிதி அக்கதாபாத்திரத்திற்கு தேவையான அணைத்து எக்ஸ்பிரேஷன்களையும் கனகச்சிதமாக வெளிப்படுத்துயுள்ளார். தமிழில் அவர் அறிமுகமாகும் முதல் படம் இது. சிகப்பு கம்பளம் விரித்து அவரை தமிழ் சினிமா வரவேற்கிறது.
மிர்னாலினி, மீனாட்சி இருவரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
ரோபோ ஷங்கர் வழக்கம் போல் எரிச்சல் கிளப்பினார்.
திரையுலகிற்கே அறிமுகமாகும் இர்பானுக்கு எந்தமாதிரியான வரவேற்ப்பு தருவதென்றே தெரியவில்லை. யப்பா.. முதல் படமா இது? சரியான நடிப்பு. அவர் கிரிக்கெட்டர் மட்டுமல்ல பக்காவான நடிகரும் கூட.
படத்தில் குறை என்று பார்த்தல், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மட்டும் தான். பாடல்கள் சூப்பர் ஹிட் என்றாலும், இந்த இசைக்கு அவர் அதிபர் இல்லையோ என்ற எண்ணம்.
அஜய் இயக்கத்தில் மீண்டும் சிறப்பான படத்தை தந்துவிட்டார். கதைக்காக அவர் பல ஆராய்ச்சிகள் செய்திருப்பார். அது அத்தனையும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய படம் தேவையா? 3 மணி நேர படம் இந்த கதைக்கு கொஞ்சம் ஓவர் தான். தூம் படத்தை பார்த்து ஒரு பாதி கதைக்கு ஊக்கமடைந்திருப்பாரோ? என்ற கேள்வி. மற்ற படி சிறப்பான சம்பவம்.
கோப்ரா – பாசம் என்ற விஷம் கொண்டது…