Asterix & Obelix கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவை, Asterix & Obelix Take on Caeser (1999), Asterix & Obelix: Mission Cleopatra (2002), Asterix at the Olympic Games (2008) & Asterix & Obelix: God Save Britannia (2012) ஆகும். இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், விறுவிறுப்பான சாகசங்கள் நிரம்பிய Asterix & Obelix: The Middle Kingdom எனும் ஐந்தாவது படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக இயற்றப்பட்டுள்ளது. நகைச்சுவையும் ஆக்ஷனும் கலந்து குடும்பத்தோடு பார்த்து மகிழ ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இப்படம்.
*கதைச்சுருக்கம்:*
Philippe Mechelen, Julien Hervé ஆகியோரின் சாகச நகைச்சுவைக் கதையில், Asterix ஆகப் படத்தை இயக்கிய Guillaume Canet-டும், Obelix ஆக Gilles Lellouche-சும் நடித்துள்ளனர். அவர்கள் இருவரும் சீனப் பேரரசரின் ஒரே மகளான இளவரசி Fu Yi (Julie Chen) என்பவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் சீனாவுக்குப் பயணம் செய்கிறார்கள். அந்த இளவரசி, Deng Tsin Qin (Bun Hay Mean) எனும் இளவரசிடமிருந்து தப்பித்து, Asterix & Obelix ஆகிய இருவரின் உதவியை நாடி Gaul-க்குச் செல்கிறார். அதன் பின் என்னாகிறது என்பது, திரையில் பார்த்து ரசிக்கவேண்டிய ஒன்றாகும். இந்த இருவரின், வேடிக்கை நிரம்பிய சாகச சீனப் பயணத்தினைப் பெரிய திரையில் காண்பதென்பது ஓர் அரிய அனுபவமாக இருக்கும்.
*Releasing on May 12th 2023 in English, Tamil, & Hindi*