தனித்துவமான குரலும் தீவிரமான நடிப்புத் திறமையாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது “Bomb” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த படத்தில், அர்ஜுன் தாஸ் தனது அசாத்தியமான ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் உணர்ச்சி பூர்வமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார். காட்சிகளின் தீவிரத்தையும், கதையின் பரபரப்பையும் தன் நடிப்பால் மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் எப்போதும் தேர்ந்தெடுக்கும் வேடங்கள் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை அளித்துள்ளன. “கைதி”, “Master”, “குட் பேட் அக்லி” போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரங்களாக பிரபலமான அவர், தனது ஆழமான குரலாலும் இயல்பான உணர்ச்சிப் பாவனைகளாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
அந்தகாரம், அநீதி, ரசவாதி போன்ற படங்களில் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி, கதைக்காக தன்னை அர்பணித்துக் கொள்ளும் இவருக்கு தமிழ் சினிமாவில் பல உட்சம் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கதை தேர்வும், நடிப்பும் இவருக்கு “Mr.Versatile” என்ற பட்டத்தை பெற்று தந்தாலும் ஆச்சர்யபட வேண்டியதில்லை.
“Bomb” படத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ள கலைநயமும், தீவிரமும், கதையின் மையக் கருத்துடன் இணைந்து பார்வையாளர்களை மேலும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான நடிப்பையும், வித்யாசமான வேடத் தேர்வையும் கொண்டு முன்னேறி வரும் அர்ஜுன் தாஸ், “Bomb” மூலம் தனது ரசிகர்களுக்கு இன்னொரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கியுள்ளார்.