அந்தகன் விமர்சனம் – (3.25/5);

பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவி குமார், யோகிபாபு மற்றும் சிலர் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “அந்தகன்”.

கதைப்படி,

நாயகன் பிரசாந்த் கண் தெரியாதவர் போல் நடித்து வருகிறார். இவருக்கு பியானோ வாசிப்பதில் பேரார்வம். கண் தெரியாதவர் போல் நடித்தால் மட்டுமே பியானோ வாசிப்பதை அனைவரும் விரும்பி கேட்பதாக கூறுகிறார். அதனாலே தான் கண் தெரியாதவர் போல் நடிப்பதாக கூறுகிறார்.

இச்சமயத்தில், பிரசாந்திற்கு ப்ரியா ஆனந்த் உடன் நட்பு ஏற்படுகிறது. இதுஒருபுறம் இருக்க, பிரபல நடிகராக வரும் கார்த்திக் பிரசாந்தின் பியானோ வாசிப்பை கேட்டு பிரம்மிக்கிறார்.

அதன்பின், தனது திருமண நாளில் தனது இரண்டாவது மனைவியான சிம்ரனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்கு வரும்படி பிரசாந்திற்கு அழைப்பு விடுக்கிறார்.,

அடுத்தநாள் பிரசாந்த் கார்த்திக் வீட்டிற்குச் செல்ல, வீட்டிற்குள் ஒரு சம்பவம் நடக்கிறது. அச்சம்பவத்தில் கார்த்திக் கொலை செய்யப்படுகிறார். அதை பார்த்த பிரசாந்தும் அந்த பிரச்சனையில் சிக்கிக்கொள்ள அதன் பின் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை.

என்ன தான் ரீமேக் படமாக இருந்தாலும் ஒரு சில படங்கள் தான் ஒரிஜினல் படங்களை விட சிறப்பாக இருக்கும் அந்த வகையில் அசலை விட இந்த ரீமேக் சிறப்பான படைப்பு என்றே சொல்லலாம்.

பல வருடங்களுக்கு பின் பெரிய திரையில் வந்திருக்கும் பிரசாந்துக்கு இப்படம் ஒரு நல்ல கம் பேக் படம் என்றே சொல்லலாம். அதே அழகு, அதே ஸ்டைல், அதே நடிப்பு என மீண்டும் 90ஸ் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளார் பிரசாந்த்.

கண் தெரியாதவர் போல் நடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் நடிப்பதாகவே தெரியாத அளவிற்கு மிகவும் தத்ரூபமான நடிப்பைக் கொடுத்திருந்தார்.

ப்ரியா ஆனந்த் உடனான காதல் காட்சி, சிம்ரனுடன் மோதும் காட்சி என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருந்தார் பிரசாந்த்.

எதிர் பாராத சர்ப்ரைஸ் கதாபாத்திரம் என்றால் அது சிம்ரனின் பாத்திரம் தான். படம் முழுக்க பயணிக்கும்படியான கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்து அதை முழுமையாக்கியிருக்கிறார் சிம்ரன்.

சமுத்திரக்கனி, யோகிபாபு, ஊர்வசி, வனிதா என படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தனர்.

எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வண்ணம் மிகவும் நேர்த்தியான ஒரு திரைக்கதையை அமைத்து அதை வெற்றிகரமாக இயக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன்.

அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் பலம். யாரும் யூகிக்காதபடி கதை நகர்வதால், அடுத்து என்ன நடக்கும் என சீட்டின் நுனியில் அமர வைக்கும்படியான படமாக செல்கிறது அந்தகன்.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் ஓகே ரகம். ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

அந்தகன் – கம்பேக் சம்பவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *