அஜித் நடிக்கும் ஏகே 61 படப்பிடிப்பு துவக்க தேதி

அஜித்தின் 60 வது படம் வலிமை கொரோனா பரவல் காரணமாக இந்த படம் ரிலீஸ் தேதி அறிவித்து பல முறை தள்ளிப்போனது. படக்குழுவும், ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்த திரைப்படம் இது. தற்போது, இந்த படம் வருகின்ற 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில திரையரங்குகளில் முன்பதிவும் துவங்கியுள்ளது.

4 மொழிகளில் இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்து. 4 மொழிகளில் ட்ரைலரையும் வெளியிட்டது. அனைத்து மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது ரிலீஸ்க்கு முன்னதாகவே 300+ கோடி ரூபாய் வியாபாரம் ஆனது என படக்குழு அறிவித்தது.

இதன் பிறகு அஜித் குமாரின் அடுத்தபடம் ஏகே 61 இந்தப் படத்தையும் வினோத் இயக்குகிறார். தயாரிப்பது போனி கபூர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி அடுத்தப் படத்திலும் இணைந்து ஹாட்ரிக் அடிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மதம் 9ம் தேதி அன்று துவங்கும் எனவும், தற்போது ஹைதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு செட் அமைத்து வருவதாகவும் தயாரிப்பளார் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *