கொரோனா வைரஸை தடுக்க அசத்தும் அக்குபஞ்சர் சிகிச்சை

கொரோனா வைரஸை தடுக்க அசத்தும் அக்குபஞ்சர் சிகிச்சை

covid-19 வைரஸின் கோரத்தாண்டவம் நமது அச்சத்தின் உச்சத்தை எட்டி விட்டது.

இதுவரை அயல்நாடுகளில் மக்கள் படும் துயரங்களை செய்திகளில் பார்த்துக்கொண்டிருந்தோம். இன்று நம் கண்ணெதிரிலேயே பார்த்து பதறுகிறோம்.

கொரோணா தொற்று ஏற்பட்டவர்கள் மரணிக்கும் போது, அவர்களை தொட்டு பார்க்க கூட முடியாமல் தள்ளி நின்று உறவினர்கள் கதறுவதும் நம் தமிழ்நாட்டிலும் நிகழ ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில், சென்னையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடலை தொட்டு பார்க்க கூட முடியாமல் தள்ளி நின்று அவரது குடும்பத்தினர் கதறி அழுதது கல் நெஞ்சங்களையும் கலங்க வைத்தது.

இதுபோன்று அடுத்து அடுத்து அங்கும் இங்கும் என செய்திகள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. கடவுளை தவறு தவிர இந்த கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து யாரும் நம்மை காப்பாற்ற முடியாது என்ற சூழலுக்கு நம்மை தள்ளியுள்ளது இந்த கோவிட் – 19.

ஆனால், இதற்குத் தீர்வாக நான் இருக்கிறேன் என்கிறது அக்குபஞ்சர் சிகிச்சை முறை.

கொரோணா நோயாளிகளை குணப்படுத்த இன்னும் அதிகாரபூர்வமாக ஆங்கில மருந்துகள் உருவாக்கப்படாத சூழலில் கோவில் – 19 வைரஸ்களுக்கு கிடுக்குப்பிடி கொடுக்கும் சிகிச்சை தன் அனுபவ ஆராய்ச்சிகளால் கண்டறிந்துள்ளார் டாக்டர் எம்.என்.சங்கர். சென்னை தி நகரில் ஹைக்யூர் அக்குபஞ்சர் சிகிச்சை மையம் நடத்தி வருபவரும், Complementary Medical Academy of Acupuncture Science என்ற அமைப்பின் நிறுவனர் தலைவருமான டாக்டர் எம்.என்.சங்கர் சுமார் 30 வருடங்களாக அக்குபஞ்சர் சிகிச்சை களை வழங்கி வருகிறார். சீனாவுக்கு சென்று முதன் முறையாக பயின்று வந்திருப்பவர். இவர் அக்குபஞ்சர் சிகிச்சையைப் பற்றி கூறிய விபரம் வருமாறு:

உடலில் இருக்கும் சில சக்தி புள்ளிகளை அக்குபஞ்சர் மூலம் தூண்டி விடும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும் சுரப்புகளை எளிதில் உருவாக்கலாம். அதன் மூலம் உடல் வலுப்பெறும். கோவிட் -19 கிருமிகள் உடலை பாதிக்காது. அதையும் மீறி நோய் தொற்று ஏற்பட்டு விட்டாலும் உடல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்காக்கும் அளப்பரிய சக்தி அக்குபஞ்சர் சிகிச்சைகளால் சாத்தியமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்வதற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தேன். அதன் அடிப்படையில் உருவான தடுப்புக்கு அக்குபஞ்சர் மருத்துவத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் அக்குப் பஞ்சர் சிகிச்சையின் மூலம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக நான் குறிப்பிட்டதை தமிழக அரசின் மாநில திட்டக் உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அக்குபஞ்சர் சிகிச்சைகளை நோயாளிகளுக்கு கொடுக்க பரிசிலிக்கும்படி தலைமைச் செயலாளருக்கும் மாநில அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.

சீனாவில் ஊஹான் மாநிலத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ், ஊபே விமான நிலையத்திலிருந்து உலகெங்கும் பயணம் செய்தவர்கள் மூலம் உலகம் முழுக்க பரவியது என்கிறார்கள். ஆனால், சீனாவில் இரண்டேகால் கோடி பேர் வசிக்கும் பெய்ஜிங், இரண்டேமுக்கால் கோடி பேர் வசிக்கும் ஷாங்காய் நகரங்களில் இதன் தொற்று அதிகம் ஏற்படவில்லை. காரணம் என்ன தெரியுமா?

சீனாவில் கிராமம் தோறும் அக்குபஞ்சர் சிகிச்சை மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. கிராமங்களில் அடிப்படை வைத்தியம் தெரிந்த Bare Foot Doctors என அடிப்படை வைத்தியம் தெரிந்த மருத்துவர்கள் உண்டு. நம்மூர் ரேஷன் கடைகள் போல அங்கே ஒவ்வொரு ஊரிலும் கிராம சபைகள் இருக்கும். கிராமசபைகளுக்கு வரும் மக்களுக்கு அங்கேயே அக்குபஞ்சர் சிகிச்சைகள் கொடுப்பார்கள். இதை நான் சீனாவில் தங்கி படிக்கும் காலத்தில் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். வெள்ளம் வரும் காலங்களிலும், முன்பனி காலங்களிலும், பின்பனி காலங்களிலும், தட்பவெப்ப நிலை மாறும் ஒவ்வொரு முறையும் கிராம சபைகளில் அக்குபஞ்சர் சிகிச்சை கொடுத்து, நோய் தொற்றுக்கு எதிராக மக்களை தயார்படுத்துவார்கள். கொரோனா தொற்றில் இருந்தும் சீன மக்கள் பெருமளவு உயிர் சேதம் இல்லாமல் தப்பித்தது இப்படித்தான்.

உடலில் இருக்கும் குறிப்பிட்ட சில சக்தி புள்ளிகளை அக்குபஞ்சர் சிகிச்சை கொடுக்கும் போது ஆல்ஃபா இம்யுனோ க்ளோபின், எண்டார்ஃபின், எபிநார்பின், செரோட்டனின், காமா அமினோ பியூட்ரிக் அமிலம் போன்ற வினையூக்கிகள் உடலுக்குள் தாமாகவே சுரக்கின்றன. அவை நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கின்றன. 461 நோய்களை அக்குபஞ்சர் சிகிச்சை முறையினால் குணமாக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார்கள் சீன மருத்துவர்கள். அதில் பலவற்றை உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்திருக்கிறது. WHOன் இணையதளத்திற்குச் சென்று, அக்குபஞ்சரால் குணமாக்கும் நோய்களின் பட்டியலில் நீங்களே பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். என்னிடம் வருபவர்கள் ஆண்டி கொரோனா நீடில் போடுங்க டாக்டர் என கேட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். என்னிடம் தான் வரவேண்டும் என்றில்லை. அனுபவம் கொண்ட அக்குபஞ்சர் நிபுணர்களை அணுகி இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். வர்மக் கலை என்ற பெயரில் தமிழர்கள் மூலம் சீனாவுக்கு சென்று அங்கிருந்து அக்குபஞ்சர் ஆக உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்த அற்புத சிகிச்சை முறையின் மூலம் கொரொனா கிருமிக்கு எதிராக போராடி ஜெயிக்கலாம்.

இவ்வாறு அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.என்.சங்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *