ஹஜ் யாத்ரீகர்களுக்கு பல்வேறு உதவிபுரியும் தமிழக அரசுக்கு நன்றி – இந்திய ஹஜ் அசோசியேஷன்

தமிழக முதலமைச்சருக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் நன்றி…

இஸ்லாமிய மக்களின் நலனில் தமிழக அரசு தொடர்ந்து அதீத அன்பும்,அக்கறையும் கொண்டு இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம். அந்த அடிப்படையில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் 15 கோடி ரூபாய் முதலமைச்சர் அனுமதி அளித்திருக்கிறார். அதேபோன்று உலமாக்களின் ஓய்வூதியம் 1,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்லாது தற்போது 2020ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோருக்கான எண்ணிக்கையை அதிகரித்து தருமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு ஹஜ் செல்ல 6028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஆனால் 3736 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி கிடைத்திருப்பதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஹஜ் பயணத்திற்கு செல்ல முடியாத காரணத்தால் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அந்த காலி இடங்களை தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கு ஒதுக்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இஸ்லாமியர்களின் உற்ற துணையாக முதல்வரும்,தமிழக அரசும் இருந்து வருவதால் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று ஹஜ் பயணம் செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வரும் மத்திய அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
பிரசிடெண்ட் அபூபக்கர்
தலைவர்
இந்திய ஹஜ் அசோஷியேஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *