ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 பட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க லைகா தயாரித்து வருகிறது.
கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்பட சூட்டிங் சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.
எனவே செட் அமைக்கும் பணிகள் பிப்ரவரி 19 புதன்கிழமை நடைபெற்று வருகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்க பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்துள்ளது.
பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மது (29) சந்திரன் (60) மற்றும் கிருஷ்ணா (34) ஆகியோர் என கூறப்படுகிறது.
மேலும் 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த விபத்து இந்தியன் 2 படக்குழுவினரை மட்டுமல்லாது கோலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Indian 2 shoot spot accident 3 set workers died