Skip to content
November 25, 2026
Ilanchoorian.com – Tamil News | Health | Tamil Cinema | Technology | Sports News

Ilanchoorian.com – Tamil News | Health | Tamil Cinema | Technology | Sports News

  • Home Trend
  • செய்திகள்latest news in tamil online
    • தேசிய செய்திகள்India News
    • உலக செய்திகள்World news online
    • தமிழகம்tamilnadu-news
    • விளையாட்டு செய்திகள்sports news online
    • வீடியோ
  • சினிமாcinema-news-online
    • சினிமா செய்திகள்
    • EventsMovie Events online
    • ExclusivesMovie Exclusives online
    • Interviews
    • Photo ShootsMovie Photo Shoots online
  • GalleryMovies Gallery online
    • ActorsActors gallery online
    • ActressActress gallery online
    • Movie Wall PapersMovie Wall Papers
  • விமர்சனம்Movie reviews online
  • அரசியல் செய்திகள்
  • VideosVideos
    • InterviewsInterviews
    • Promos
    • Songs
    • Teasers
    • Trailers
  • Home
  • சினிமா
  • தந்தையின் பிரிவை உணர்த்தும் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்டார் சாந்தனு பாக்யராஜ்!

Contact Us

69, 2nd Floor, Sivanandha Nagar,
17th Street, Senthil Nagar,
Kolathur, Chennai - 99.
E-mail ID : ilanchoorian123@gmail.com

  • Trend
  • சினிமா
  • சினிமா செய்திகள்

தந்தையின் பிரிவை உணர்த்தும் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்டார் சாந்தனு பாக்யராஜ்!

hemalatha54 seconds ago01 mins

அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும் ஏக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான மெலடிப் பாடலாக அமைந்துள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’, தந்தை – மகன் உறவின் உணர்வுகளை இசையின் வழியே அழகாகக் கடத்துகிறது.

இப்பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள். தந்தையின் அன்பையும், குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் மையப்படுத்திய இப்பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜிஜேந்திரன் V படத்தொகுப்புப் பணிகளையும், C. K. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குடும்பப் பின்னணியில் ஃபேமிலி டிராமா, ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

மெக்கானிக் பிக்சர்ஸ் (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP (Millennials Movie Production LLP) நிறுவனம் சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ குடும்ப உறவுகளின் மற்றொரு உணர்வுப்பூர்வமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது.

Tagged: Appa Un Aararoo Balloon Pictures December 11 Release Family Boy Mechanic Pictures Mithun Manickam Nirmal JP Shanthanu Bhagyaraj Sundarayyar Tamil Cinema Tamil Movie Songs Venkatramanan

Post navigation

Previous: சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம் – இயக்குநராக தருண் தேஜா!

Related News

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம் – இயக்குநராக தருண் தேஜா!

hemalatha6 hours ago 0

2027-ஐ ‘அசரீரி’ மூலம் வரவேற்கும் பிரேம் குமார் – ஃபஹத் ஃபாசில் கூட்டணி!

hemalatha1 day ago 0

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான பாடல் வெளியீடு!

hemalatha1 day ago 0
  • Recent

Trending

Address - 69, 2nd floor, Sivanandha Nagar, 17th Street, Senthil Nagar, Kolathur, Chennai - 99
Email Id: ilanchoorian123@gmail.com Powered By BlazeThemes.