பேட்ட ராப் – விமர்சனம்

சிறுவனாக இருக்கும் பாலசுப்பிரமணி {பிரபுதேவா}, நடிகர் பிரபுதேவாவின் தீவிர ரசிகராக இருக்கிறான். வளர வளர அவரைப் போலவே உடை, தோற்றம், நடனம், உடல்மொழி எனத் தன்னை மாற்றிக்கொள்கிறார் பாலசுப்பிரமணி. பின் வளர்ந்த பிறகு ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் முயற்சி செய்கிறார்.

மறுபக்கம் வேதிகா ஒரு பிரபல பாடகியாக உள்ளார். வேதிகாவின் பாடல் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பிரபுதேவா அவரை சந்திக்கிறார். அவருடன் காதலில் விழுகிறார். வேதிகாவுக்கும் சென்னை ரவுடி தாதா-க்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் பாலசுப்பிரமணி பிரச்சனையை சரி செய்வதற்காக உள்ளே நுழைகிறார். பிரச்சனை இன்னும் பெரிதாகிறது.

அதற்கு பின் இந்த பிரச்சனியில் இருந்து எப்படி பாலசுப்பிரமணி தப்பித்தார்? வேதிகாவுக்கும் [பாலசுப்பிரமணிக்கும் என்ன தொடர்பு? பாலசுப்பிரமணியனின் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.Petta Rap' Teaser: Prabhu Deva sings, dances and fights in the musical actioner - The Hinduமுழுப்படத்தையும் தன் நடனம், காமெடி, நடிப்பு என தோளில் தாங்கியுள்ளார் நடிகர் பிரபுதேவா. வேதிகா எமோஷனலாகவும் , நடனத்திலும் அசத்தியுள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.പ്രഭുദേവയ്‌ക്കൊപ്പം വേദികയും സണ്ണി ലിയോണിയും; പേട്ടറാപ്പ് ട്രെയിലർ | Petta Rap Trailerபிரபுதேவாவே நடிகர் பிரபுதேவாவிற்கு ரசிகனாக இருக்கும் கதையை இயக்கியுள்ளார். இந்த இரண்டு கதாப்பாத்திரங்களுக்கு எதேனும் வித்தியாசம் காட்டிருக்கலாம். படத்தின் தொடக்கத்தில் சரியான கதையோடு ஆரம்பித்தாலும் , அது நீண்ட நேரத்திற்கு தொடரவில்லை. திரைக்கதை எக்குத்தப்பாக செல்கிறது. போகும் போகில் காட்சிகள் , நகைச்சுவை, பாடல் காட்சி, சண்டை என சம்மதம் இல்லாமல் நடந்துக் கொண்டு இருப்பது பலவீனம்.

டி. இமானின் இசை பெரிதும் எடுப்படவில்லை. படத்தின் பாடல் இருக்கிறதா இல்லை பாடலில் படம் இருக்கிறதா என்ற தோன்றவைக்கிறது.ஜித்து தாமோதரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சிக்கும் பளபளப்பையும், ரிச்னஸையும் கொடுத்திருக்கிறது.ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *