தரணி இராசேந்திரன் இயக்கத்தில், ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் “யாத்திசை”.
கதைப்படி,
கொதி(சேயோன்) என்ற எயின குலத்தலைவன் சில நூற்று வீரர்களை கொண்டு, பாண்டிய மன்னரான ரணதீர பாண்டியனை(ஷக்தி மித்ரன்), எதிர்த்து போர் செய்ய முற்படுகிறார். அந்த யுத்தத்தில் வென்றது யார்? நம் வரலாறு என்ன? ஒருவனின் பேராசையும், வீரமும், பழிவாங்கும் உணர்ச்சியும் கலந்தால் என்ன நடக்கும் என்பதை பேசியுள்ளது “யாத்திசை”.
வரலாற்றை நன்கு அறிந்து, தெளிவான திட்டமிடலுடனும், சரியான குழுவும் இருந்தால் தான் இப்படி ஒரு படத்தை அழகாக காட்சிப்படுத்த முடியும்.
வரலாற்றையும், சங்க தமிழையும் பதிவு செய்ய நினைத்த இயக்குனர் தரணி இராசேந்திரனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். மேலும், சங்க தமிழ் வார்த்தைகளை எயினர்கள் மற்றும் பேசும் விதத்தில் அமைத்து. புதுமையை காட்டியுள்ளார் இயக்குனர்.
எயினர் என்ற ஒரு குலத்தை மையமாக கொண்டு 2 மணி நேரத்தை அமைத்து. பண்டைய கலாச்சாரங்களை காட்சிபடுத்தி, நமக்கு புதுமையை காட்டியுள்ளார் இயக்குனர் தரணி.
ஆனால், சில கோடி பட்ஜெட்டிலும் இப்படிப்பட்ட பிரம்மாண்டத்தை காட்டமுடியும் என்று நிரூபித்துள்ளார்.
குறிப்பாக, ரணதீரனுக்கு பில்டப் கொடுக்கும் காட்சிகள், இரணதீரனை அறிமுக படுத்தும் காட்சி என புல்லரிக்க வைத்திருக்கிறது படக்குழு.
கொற்றவைக்கு பலி கொடுக்கும் காட்சியை இன்னும் சுருக்கியிருக்கலாமோ என்ற எண்ணம் மட்டும். மேலும், வியக்க வைக்கும் சண்டைக்காட்சிகள் என்றாலும் புதுமையான சண்டைக்காட்சிகள் அமைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் தரணி.
நடிகர்களை பற்றி பேச வேண்டும் என்றால், அனைவருமே புது முகம் தான். ஆனால், கொடுத்த பாத்திரத்தை இவர்களுக்கு மேல் யாராலும் கடின உழைப்பை கொடுத்து இந்த படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்க முடியாது.
கே.சக்ரவர்த்தியின் இசை, நம்மை 700 ஆம் நூற்றண்டிற்கே கொண்டு சேர்த்து விட்டது.
ஷக்தி மித்ரன் – ரணதீர பாண்டியன், சேயோன் – கொதி ( எயின தலைவன்), ராஜலட்சுமி – தேவரடியார், குரு சோமசுந்தரம் – எயின பூசாரி, சுபத்ரா – பெரும்பள்ளி தலைவி, சமர் – துடி (எயின போர் வீரன்), வைதேகி அமர்நாத் – தேவரடியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நம் மனதில் நின்றுள்ளனர்.
யாத்திசை – தமிழனின் புகழையும், வீரத்தையும் பேசிய படைப்பு.