தமிழ் சினிமா துறையில் டாப் ஹீரோவாக மாஸ் காட்டி, வசூலை குவித்து வசூல் மன்னனாக இருப்பவர் விஜய். ஆனால், அவருக்கோ சமீபத்தில் விமர்சன ரீதியாக ஹிட் அடிக்க ஒரு படம் கூட அமையவில்லை என்பது தான் உண்மை.
ரசிகர்களையும் அவரின் படங்கள் திருப்தி செய்வதில்லை. அவரின் படங்கள் அனைத்தும் பண்டிகை தினங்களில் வெளியாவதால். வேறு வழியின்றி விஜய் படத்தை குடும்ப ரசிகர்கள் பார்த்து வசூல் மழைக்கு காரணமாக அமைகிறார்கள்.
“ரீமேக் மன்னன்” அட்லீயுடன் “தெறி” என்ற வெற்றிப்படத்தை மட்டுமே கடைசியாக கொடுத்தார் விஜய். அதன் பின், மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், வாரிசு என தொடர் தோல்விகள் தான். அதுவும் கடைசியாக வெளியான வாரிசு படம் எப்படி இருந்தது என்று அனைவர்க்கும் தெரியும்.
தற்போது, விஜய் நடித்து வரும் படமான “லியோ”வுக்கு கோலிவுட் மட்டுமின்றி பான் இந்தியா லெவலில் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜும் அவரின் முந்தைய படங்களும் தான்.
சரி இதெல்லாம் இருக்கட்டும், விஜய் ரசிகர்கள் எதுக்கு கதறுறாங்கனு கேட்டால்….
அதற்கு காரணம் விஜய்யின் 68வது பட இயக்குனர் தான். ஆமாங்க, கிராக், மற்றும் வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களின் இயக்குனரான கோபிசந்த் மலினேனி விஜய்க்கு கதை கூறியுள்ளாராம்.
மேலும், அந்த கதையை ஒரே சிட்டிங்கில் ஓகே செய்துள்ளாராம் விஜய். மீண்டும், தெலுங்கு இயக்குனருடன் விஜய் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்.
தெலுங்கு இயக்குனர் வேண்டாம் என மீம் மூலமாகவும், ட்விட் மூலமாகவும் ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.