மாஸ்டர் மஹேந்திரன் மற்றும் அவரின் நண்பர்கள் மூவரும் யூட்யூபில் சமையல் சேனல் நடத்தி வருகிறார்கள்.
அதில் வரும் கமென்டின் மூலம் ஹீரோயினுடன் காதல் வளர்க்கிறார் ஹீரோ.
அந்த ஹீரோயினின் அண்ணன் பேயாக வந்து, சாதி மாற்றி திருமணம் செய்ய நினைக்கும் ஆண்களை கொலை செய்கிறார்.
அந்த பேயை பிடிக்கும் பணியை மஹேந்திரன் மற்றும் அவரின் நண்பர்களுக்கு வழங்குகிறார் இன்ஸ்பெக்டர்.
அந்த பேயை பிடித்தார்களா? அந்த பேய் மஹேந்திரனை என்ன செய்தது? அந்த பேய் கொலை செய்யும் காரணம் என்ன என்பதை காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
சில இடங்களில் “அடல்ட் காமெடி”. பல இடங்களில் “கிட்ஸ் காமெடி”. நடுவர்களுக்கும் காமெடி வைத்திருக்கலாம் இயக்குனர் அருண் கார்த்திக்.
தொய்வான திரைக்கதையை கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தால், “காஞ்சனா” போல் இருந்தோருக்கும் இப்படம்.
மேலும், மாஸ்டர் மஹேந்திரனை தவிர அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். ஏனென்றால் மாஸ்டர் மஹேந்திரனின் நடிப்பு கொஞ்சம் “ஓவர் ஆக்டிங்” தான். கிட்ட தட்ட 4 படங்களை தன்வசம் வைத்திருக்கிறார் மஹேந்திரன். அதில் வெற்றி கண்டே ஆகவேண்டும்.
படத்தில் நம்மை ரசிக்க வைத்த விஷயங்கள் இரண்டு. ஒன்று துவாரகா தியாகராஜனின் பின்னணியும் பாடல்களும். மற்றொன்று மாஸ்டர் மஹேந்திரன் கையில் வைத்திருக்கும் குரங்கு பொம்மை.