‘அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
” அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் என்னுமிடத்தில் நண்பன் குழும நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் ஆளுகைக்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனனை நியமித்ததை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
‘நண்பன்’ என்ற சொல்லிற்கு இந்திய மொழிகளில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருக்கும் தமிழ் மொழி, ‘உண்மையான நண்பன்’ என பொருள் உரைக்கிறது. அதன் அர்த்தத்திற்கு ஏற்ப உண்மையாக ‘நண்பன் குழுமம்’ பிறருக்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக எந்த நிபந்தனையுமின்றி, பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் உதவுகிறது. மேலும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியில் சுதந்திரத்தை அடைவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது. இதனூடாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறது. ‘கிரீன் பிளானட்’ எனும் ‘பசுமையான பூமி’யை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்காகவும் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.
நண்பன் குழும நிறுவனங்களில் நண்பன் வென்ச்சர்ஸ், நண்பன் ரியால்ட்டி, நண்பன் சோழா லேண்ட் ஹோல்டிங்ஸ், நண்பன் பிரைவேட் ஈக்விட்டி, நண்பன் இ எஸ் ஜி மற்றும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இவைகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய சிக்கல்களை எதிர்கொண்டு, அதற்கான தீர்வுகளை உருவாக்கவும், அதனை மேம்படுத்தவும், உலகம் முழுவதும் உள்ள தனி நபர்கள் மற்றும் சமூகங்களுக்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்தித் தருவதிலும் இணைந்து செயல்படுகின்றன.
அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நண்பன் அறக்கட்டளை’- சுய நிதி ஆதாரத்தில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் பல்வேறு வகையான சேவை திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
நண்பன் குழும நிறுவனங்களைப் பற்றிய கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள www.nanban.com எனும் இணையதள முகவரியை பார்வையிடலாம்.