ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி நடிப்பில், வினோ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “PROJECT C”.
கதைப்படி,
பட்டப்படிப்பு படித்த ஸ்ரீ தனது கெமிஸ்ட்ரி படிப்பு சான்றிதழ்களை தொலைத்து விடுகிறார். சான்றிதழ் இருந்தால் தான் தக்க வேலைக்கு செயில்ல முடியும் என்ற சூழ்நிலையில் இருக்கும் ஸ்ரீ. டூப்ளிகேட் சான்றிதழ் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறார்.
அப்போது, நண்பன் உதவியால், பக்கவாதம் வந்த பெரியவர் ஒருவரை 24 மணி நேரமும் பார்த்துக் கொள்ளக்கூடிய வேலை கிடைக்கிறது.
அந்த வேலையை வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ. வயதில் மூத்த மாமனை திருமணம் செய்து கொண்டு எவ்வித ஆசைகளையும் அனுபவிக்காமல் அந்த முதியவரின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வருகிறார் வசுதா கிருஷ்ணமூர்த்தி.
வசுதாவிற்கும் ஸ்ரீக்கும் காதல் வர, எங்காவது ஓடிப்போகலாம் என்று வசுதாவை அழைக்கிறார் ஸ்ரீ. அதற்கு தேவையான பணம் நிறைய உள்ளது என்று வசுதாவிடம் ஸ்ரீ கூற.
ஸ்ரீயிடம் ஏது அவ்வளவு பணம் என்று அதிர்ச்சியாகிறார் வசுதா. அதன் பிறகு என்ன நடந்தது? ஸ்ரீ’க்கு அதிக பணம் கிடைத்தது எப்படி.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
சரியான திட்டமிடலுடன் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் வினோ. நான்-லீனியராக பயணித்த இக்கதையை, லீனியராக பயணிக்க செய்திருந்தால் படம் அனைத்து தரப்பு ஆடியன்ஸுக்கு எளிதாக புரிந்திருக்கும்.
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீ, தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். அவரின் ஒவ்வொரு மாற்றமும் படத்திற்கு வலு சேர்த்துக் கொண்டே சென்றது.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான பஞ்சவர்ணம் (வசுதா வசுதா கிருஷ்ணமூர்த்தி) தான் இப்படத்திற்கு தூண். இவரின் பாத்திரத்திற்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அதற்கு காரணம் வசுதாவின் அழகை காட்சிப்படுத்திய கேமரா மேனும் தான்.
சிறிய கதாபாத்திரம் என்றாலும் முக்கியமான ட்விஸ்டுக்கு காரணாமாக அமைக்கிறார் சாம்ஸ்.
இவர் எடுக்கும் ரிவெஞ்ச் காட்சிகள் அல்டிமேட். சிபு சுகுமாரின் பின்னணி இசை பல இடங்களில் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.
சதீஷ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.
Project C-யின் மூன்றாம் பாகத்திற்கு நம்மை வெய்ட் செய்ய வைத்துள்ளார் இயக்குனர் வினோ என்பது தான் நிதர்சனம்.
என்னதான் படம் சிறப்பாக இருந்தாலும், ட்ரைலர் பார்த்துவிட்டு எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். அது படம் பார்க்கும் போது தான் புரியும்.
PROJECT C – Best Sophomore