அருள்நிதி பவித்ரா, சாம்ஸ், கிஷோர், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் “டைரி”. இன்னாசி பாண்டியன் இயக்கிய இப்படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதய நிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இப்படத்தின் விமர்சனத்தை வாசிக்கலாம்.
கதைப்படி,
ஊட்டியிலிருந்து கோயபுத்தூர் வரும் வழியில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவில் இரவு நேரத்தில் விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன , போலீஸ் ட்ரைனிங் முடித்த கதையின் நாயகன் வரதா, (அருள்நிதி) மற்றும் அவருடன் ட்ரைனிங் முடித்த அனைவர்களுக்கும் ஆளுக்கொரு நிலுவையிலுள்ள கேஸ் கொடுக்கப்படுகிறது அதில் நாயகன் வரதாவிற்கு 16 வருடங்களுக்கு முன்பு புதுமண தம்பதிகளை கொலை செய்துவிட்டு அவர்களின் நகைகளை கொள்ளையடித்த கேஸ் வருகிறது, இந்த கேஸை கையிலெடுக்கும் வரதா அந்த கொண்டை ஊசி வளைவு விபத்து கேஸிற்குள் எப்படி வருகிறார் என்பதும் அந்த 13 வது கொண்டாய் ஊசி வளைவில் நடக்கும் விபத்துக்கு காரணம் என்ன என்பதையும் இவர் கையிலெடுத்த கேஸையும் முடித்தாரா ? இல்லையா என்பதுதான் மீதி கதை…
இதனை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் சில ட்விஸ்டுகளுடன் சிறப்பாக கூறியுள்ளார்
கதைக்களம் வித்யாசமாக இருந்தாலும், இயக்குனர் இன்னாசி பாண்டியன் திரைக்கதையில் சிறிது கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கடைசி 15 நிமிடங்கள் வித்யாசமான ஒரு சிந்தனையே.
ஒளிப்பதிவு மிக சிறப்பு. ஆனாலும் சில காட்சிகளை பகலில் எடுத்துவிட்டு நைட் எபெக்ட் செய்தது சற்று சொதப்பல்.
அருள்நிதியின் நடிப்பு வழக்கம் போல் சிறப்பு தான், திரில்லர் என்றாலே அருள்நிதி என்று தான் எந்த இயக்குனரின் சிந்தனையிலும் வருவார் போல.
பின்னணி இசை கச்சிதம், பல இடங்களில் திகிலடைய செய்தது.
டைரி – சுவாரஸ்யமாய் எழுதியிருக்கலாம்.