தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி தற்போது மிகப்பெரும் ஹீரோவாக பல கோடி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் தான் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”. 168 படங்கள் நடித்து முடித்து, தற்போது 169 வது படத்தில் நடித்துவருகிறார் ரஜினி.
சிறு வரலாறு:
1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் பிறந்தார் ரஜினிகாந்த் என அழைக்கப்படும் சிவாஜி ராவ் கெய்க்வாட். பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தார். பின்பு, நடிப்பில் ஆர்வமிருந்தமையால் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூடில் நடிப்பு பயின்ற இவரை இயக்குனர் கே.பாலச்சந்தர் கண்டறிந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார். சிவாஜி ராவ் என்ற பெயரை நீக்கி ரஜினிகாந்த் என அடையாளத்தை தந்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல ஆண்டுகளாக அரசியல் வருவேன், வரமாட்டேன் என்று ரசிகர்களை ஏமாற்றி வந்த இவர். “மக்கள் சேவை கட்சி” என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி அதற்கான வேலைகளை செய்துவந்தார். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை அரசியலுக்கு இனி வரமாட்டேன் என்று தெளிவான ஒருமுடிவை எடுத்து கட்சியையும் கலைத்துவிட்டு தன் பெயரை காப்பாற்றினார் ரஜினி.
சில நாட்களுக்கு முன்பு:
டெல்லி பயணம், ஆளுநர் சந்திப்பு என பல மீட்டிங்ஸ் போட்டு நெட்டிசன்களிடம் சிக்கித் தவித்தார் ரஜினிகாந்த். அவரின் சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்று அவர் பேட்டியளித்திருந்தாலும் அதற்கான காரணங்கள் பல இருந்தன.
ரஜினியின் டெல்லி பயணமும், ஆளுநர் சந்திப்பும்; அரசியலா? சுயநலமா?
தற்போது:
தமிழ் நாட்டில் பல ஆயிரம் கொடிகளை சம்பாதித்த சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது தாய் மண்ணான கர்நாடகாவில் மட்டுமே முதலீடு செய்வார். அந்த வகையில் பல பள்ளிகள், இன்ஸ்டிடுட்க்கள் மற்றும் வர்த்தகர்களை நடத்தி வரும் இவர். விரைவில் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப் படவுள்ளார் என்று செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இவர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பணம் ஏராளம் சம்பாதித்து விட்டேன். ஆனால், நிம்மதி இல்லை என்று இவர் பேசியது மிக வைரலானது. ஒருவேளை, வேலையே இல்லாத வேலையான ஆளுநர் வேலையை செய்தால் நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தாரோ ரஜினி என்று இச்செய்தியை கேட்ட ரசிகர்கள் டிவிட்டரில் பதிவு செய்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு முன்னதாக அம்பேத்கரையும் – மோடியையும் ஒப்பிட்ட இளையராஜா. தற்போது, பா.ஜ.க வின் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 1400 படங்களுக்கு மேல் இசையமைத்து பல்லாயிரக் கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் பல எமோஷன்களுக்கு உறுதுணையாய் இருந்த இளையராஜாவையே #இளையராஜாவாவது_ மயிராவுது என்ற ஹாஷ் டேக் பயன்படுத்தும் அளவிற்கு ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார் இசைஞானி இளையராஜா.
மேலும், பா.ஜ.காவுக்கு ஆதரவாக இருக்கும் 4 முறை தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவதின் 90 கோடி பட்ஜெட்டில் உருவான “தாக்கட்” திரைப்படம் வெறும் 3 கோடியை மட்டுமே வசூல் செய்து படு தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கர்நாடகாவுக்கு ஆளுநராகும் செய்து உண்மையாக இருந்தால், ரஜினியின் நிலைமை தான் என்ன? அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலைமை என்ன? என்று காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.