ஜீவி 2 விமர்சனம் – (3.5/5)

வெற்றி, கருணாகரன், மைம் கோபி, ரோகினி, ரமா, ஜவஹர் நாசர், அஷ்வினி சந்திரசேகர் மற்றும் பலரின் நடிப்பில் உருவான தொடர்பியல் திரைப்படம் “ஜீவி-2”. கோபிநாத் இயக்கிய இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விமர்சனத்தை வாசிக்கலாம்..

கதைப்படி..,

ஏற்கனவே, ஜீவி திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இப்படம் பார்ப்பது மிகவும் எளிது. அப்போது தான் கதையின் போக்கு புரியும். முதல் பக்கத்தில் நாயகன் வெற்றியும் நண்பன் கதிரும் இனைந்து ஒரு நகை திருட்டை செய்து வேறு ஒருவனை போலீஸிடம் சிக்க வைக்க. அங்கிருந்து ஆரம்பிக்கிறது தொடர்பியல் விதி. வெற்றி குடும்பத்திற்கும், ரோகினி குடும்பத்திற்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் நடக்க. நடக்கும் தொடர்பியலை அதை தடுக்க, ரோகினியின் மகளை திருமணம் செய்கிறார் வெற்றி.

இப்போதுள்ள இரண்டாம் பாகத்தில், அஷ்வினியை திருமணம் செய்ததும் வெற்றியின் வாழக்கையில் தொடர்பியல் நின்றதா? இல்லை மேலும் அவர்கள் செய்த மறுத்திருட்டு வெற்றியின் வாழ்க்கையை பாதித்ததா? அப்படியானால், தொடர்பியல் விதியை வெற்றி எப்படி கையாண்டார்? என்ற பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் விடை தான் படத்தின் இரண்டாம் பாதி….

நாயகனாக நடித்த வெற்றி, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களையே நடித்து கலக்குகிறார். வழக்கம் போல் இந்த படத்திலும் அவரின் ஆக்டிங் சூப்பர்.

கண் தெரியாத பெண்ணாக அஷ்வினி நடித்துள்ளார். பாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பு.

ரோகினி, ரமா, மைம் கோபி, கருணாகரன் அனைவரும் படத்தில் முழுமையாக பயணித்தாலும். வெகு சில வசங்கங்களோடு விளையாடியுள்ளனர்.

நாசரின் தம்பி, ஜவஹர் நாசர் நல்ல நடிப்பு. ஆனால், போலீஸ் கதாபாத்திரத்திற்கு இவர் சரியான தேர்வல்ல.

கோபிநாதின் இயக்கம், முதல் பாதியில் விறுவிறுப்பும், இரண்டாம் பாதியில் விடையையும் தந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால், கிளைமாக்ஸ் கொஞ்சம் கவனித்து இயக்கியிருந்தால் படம் அட்டகாசமாக இருந்திருக்கும். ஒருவேளை ஜீவி-3 க்கான லீடாக கூட இருக்குமோ என்ற எண்ணம்.

கே.எஸ்.சுந்தர மூர்த்தியின் இசை, படத்தின் விறுவிறுப்பை கூட்டிச்சென்றது. பல இடங்களில் இசை சுவாரஸ்யத்தையும் கிளப்பியது.

ஜீவி-2 – தொடர்பியல் விதி உண்மையோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *