இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் கே கே திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்

கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்த கேகே என்று அழைக்கப்படும் பாடகர் கிர்ஷன்குமார் குன்னத் நேற்று (மே 31) மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 53.

கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்து, கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு, இரவு 10 மணியளவில் அவர் கொல்கத்தாவின் சிஎம்ஆர்ஐ மருத்துவமனையில் “இறந்துவிட்டார்” என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேகே நேற்று கொல்கத்தாவின் நஸ்ருல் மஞ்சாவில் தனது இசை நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.

இவர் தமிழில், காதல் வளர்த்தேன், ஸ்டராபெரி பெண்ணே, அப்படி போடு, காதலிக்கும் ஆசை, உயிரின் உயிரே என பல இனிமையான படலைகளை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பிரபலங்கள் இவரின் மரணத்திற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது திடீர் மரணம் குறித்து மக்கள் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் வெளிபடுத்திவருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *