Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில், பிரவீன் , அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் நடிப்பில் AHA தளத்தில் வெளியான படம் போத்தனூர் தபால் நிலையம்.
இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் ஆபிஸை வைத்து உருவான ‘போத்தனூர் தபால் நிலையம்’ திரைப்படத்தின் கதைப்படி,
சிறுவயது முதல் நண்பர்களாக இருக்கும் பிரவீன் & அஞ்சலி ராவ் & வெங்கட் ஆகியோர் தனது பள்ளியில் படிக்கும் ஒரு பணக்கார மாணவனை பார்த்து நாமும் வளர்ந்து பெரியவனாகி பெரிய பணக்காரன் ஆக ஆசைப்படுகின்றனர்.
எனவே தன் படிப்பை முடித்த பின்னர் கம்ப்யூட்டர் பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறார் பிரவீன். ஆனால் கை சூப்பும் மேனேஜரால் பேங்க் லோன் கிடைக்காமல் போகிறது. மறுபக்கம், போத்தனூர் தபால் நிலையத்தில் ஒரு நேர்மையான போஸ்ட் மாஸ்டராக வேலை செய்யும் பிரவீனின் தந்தை, ஒரு நாள் சனிக்கிழமையன்று போஸ்ட் ஆபீசில் மக்களின் சேமிப்பு பணத்தை (ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம்) பேங்கில் டெபாசிட் செய்ய தாமதம் ஆகிவிட்டதால் வீட்டுற்கு கொண்டு வருகிறார்.
வரும் வழியில் அந்த பணத்தை தொலைத்துவிடுகிறார். இது வெளி உலகுக்கு தெரிந்தால் அப்பா ஜெயிலுக்கு போக நேரிடும். எனவே, ஞாயிற்றுக்கிழமை-க்குள் தொலைத்த பணத்தை தேடி அலைகின்றனர் பிரவின் டீம். இறுதியில் பணம் கிடைத்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
1970-1980-1990 களில் நடக்கும் இக்கதையை அக்காலத்து அழகு மாறாமல் திரையில் காண்பித்துள்ளார் இயக்குனர் பிரவீன். அவரே கதாநாயகனாக நடித்துள்ளதால் கதாபாத்திரத்தின் அழுத்தத்தை உணர்ந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உடன் நடித்த அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் என அனைவருமே கதையின் போக்கிற்கு நடித்துள்ளனர். அனைவரின் நடிப்பும் பாராட்டும் வகையறா.
திரைக்கதை படத்தின் சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் பாதிக்காத வண்ணம் அமைந்தது படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் குடும்பம்பமாக அனைவரும் சிரித்து பார்க்கக் கூடிய படம் “போத்தனூர் தபால் நிலையம்”.
போத்தனூர் தபால் நிலையம் – ஓடிடி தளத்தில் வெளியான ஒரு சிறந்த படைப்பு.