தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனைகள் செய்து புகழ்பெற்று விளங்கும் திரு.கேசவன், தமிழ்த் திரையுலகில் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தயாரிப்பாளராக ‘வேழம்’ படம் மூலம் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 10 வருடங்களாக உதவி இயக்குனராகவும், விளம்பரப் பட இயக்குநராகவும், குறும்படத் இயக்குநராகவும் பரந்த அனுபவமுள்ள சந்தீப் ஷ்யாம், இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், வணிக ரீதியாக எண்ணற்ற உள்ளடக்கம் சார்ந்த, வெற்றிகரமான பொழுதுபோக்கு திரைப்படங்களை தயாரித்து, விநியோகித்த SP Cinemas, ‘வேழம்’ படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளது. “வேழம்” திரைப்படம் ஜூன் 24, 2022 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது பன்முகத் திறமையை ஒவ்வொரு திரைப்படத்திலும், நிரூபித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். வேழம் (யானை) விலங்கின் வலுவான நினைவாற்றலைக் தலைப்பில் குறிப்பிட்டது போல, படத்தின் கதாநாயகனும் அதே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார். முழு திரைப்படமும் இந்த கருத்தைச் சுற்றியே சுழல்கிறது மற்றும் இந்த திரைப்படம் ஒரு அழுத்தமான திரைக்கதையை கொண்டுள்ளது.
SP Cinemas இந்தியா உட்பட இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையைப் பெற்று ஜூன் 24, 2022 அன்று உலகம் முழுதும் வெளியிடுகிறது.