எங்கே சென்றார் தனஞ்செயன்? வலைவீசி தேடும் ரசிகர்கள்

இந்த ஏப்ரல் மாதத்தில் சமூக வலயத்தளம், நியூஸ் சேனல்கள், யூட்யூப், மவுத் டாக் என இதுவரை மக்களால் பேசப்பட்டு பகிரப்பட்டு வரும் ஒரே விஷயம் கே.ஜி.எஃப் 2 vs பீஸ்ட் தான்.

சமீப காலமாக வெளியான தளபதி விஜயின் படங்களான சர்கார், பிகில், மாஸ்டர் வசூலில் சக்கை போடு போடடாலும் அது தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து வந்தது. இந்நிலையில் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பல மடங்கு ஏமாற்றமே.

இருந்தாலும் வசூலில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸை நிரப்பி வருகிறது. பலர் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தாலும் பீஸ்ட் படத்தின் முதல் நாள் உண்மையான வசூல் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

ட்விட்டர் கேள்விகள் :

இதை கையில் எடுத்த ரசிகர்கள் முதல் நாள் வசூல் பற்றிய கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதில், தயாரிப்பு நிறுவனம், இயக்குனர், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கு கேள்வி எழுந்தாலும் திரு.ஜி.தனஞ்செயனை(BOFTA) ஒரு பதம் பார்த்து வருகின்றனர்.

 

அவரிடம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை ஏன் அண்ணாத்த படத்திற்கு கூறியது போல் முதல் நாள் வசூலை சொல்லவில்லை? பொய் கணக்கு சொல்லி வடை சுட பார்க்குறீர்களா? நீங்களும் அணிலா? என்று பாரபட்சம் பார்க்காமல் கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.

அந்த கேள்விகளுக்கு ரசிகர்கள் கமெண்டுகளில் சரமாரியான தாக்குதல்களை முன் வைக்கின்றனர். இந்த கேள்விகள் எழுந்ததோ ஏப்ரல் 15ம் தேதி ஆனால் இன்றைய தினம் வரை கண்டுகொள்ளவில்லை திரு.தனஞ்செயன்(BOFTA) அவர்கள்.

திரு.ஜி.தனஞ்செயன் (BOFTA) பற்றிய வரலாறு :

சினிமா துறைக்கு வருவதற்க்கு முன்னதாக ASIAN PAINTS, VODAFONE, BHARATI AIRTEL, SAREGAMA போன்ற பல நிறுவனங்களில் 15 ஆண்டுகாலம் வேலை பார்த்து வந்தார்.

சினிமா வழக்கை :

சினிமாவில் இவர் இயக்குனராக பிலிம் பெஸ்டிவல் அவார்டுகள் பல குவித்தாலும். இவர் வேலை செய்த நிறுவனங்களுக்கு நஷ்டம் தான் மிச்சம். MOSER BAER என்ற cd மற்றும் dvd நிறுவனத்தில் சீப் ஆப்ரேட்டிங் ஆபிஸராக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் நஷ்டமடைந்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அதன் பின்னர், UTV motion pictures நிறுவனம் பல வெற்றி படங்களை வழங்கி வந்தது. அந்நிறுவனமும் இவர் கால் வைத்த சில ஆண்டுகளிலேயே (2016ம் ஆண்டு) மூடிவிட்டனர்.

இரு பெரிய நிறுவனங்களை க்ளோஸ் செய்ததன் பிறகு BOFTA என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் அடுத்ததாக வேலைக்கு சேர்ந்த SONY LIV நிறுவனம் இவரின் வரலாற்றை கண்டு இவரை பணி நீக்கம் செய்தது.

தற்போது பிரபல இயக்குனர் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான STUDIO GREEN நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரை தமிழ் சினிமாவின் என்சைக்லோபீடியா என்று திரையுலகினர் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் கேள்விக்கு என்ன பதில் ?

இவரின் மேல் இருக்கும் பல கேள்விகளுக்கு திரு.தனஞ்செயன் (BOFTA) அவர்கள் பதில் அளிப்பாரா? இல்லை இதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவாரா? என்று அவருக்கு தான் வெளிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *