சில தினங்களாக இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
காரணம் :
‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இளையராஜா எழுதிய முன்னுரை சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ என்று இளையராஜா எழுதிய முன்னுரையே இந்த சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது.
அம்பேத்கரையும், மோடியையும் குறிப்பிட்டிருந்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் வலுத்து வருகிறது.
மேலும் ஆதரவு தரும் தரப்பு பா.ஜ.க கட்சி தரப்பினர் மட்டுமே. இவருக்கு எதிராக ட்விட்டரில் #இளையராஜாவாவுது_மயிராவுது என்ற ஹாஷ் டேக் இரு தினங்களாக ட்ரெண்டிங்கில் இருந்தது.
பா.ஜ.க திடீர் முடிவு :
இந்நிலையில், இசைஞானி இளையராஜாவிற்கு ராஜ்யசபா சீட் வழங்க பா.ஜ.க., முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இச்செய்தி மக்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்த சீட் காக தான் இளையராஜா மோடியை புகழ்ந்தாரா? இளையராஜாவிற்கு அரசியல் ஆசையா? போன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது.