தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஆர் முருகதாஸ். அதோடு தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர் பல இளம் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
அந்த வகையில் தனது உதவி இயக்குநரான பொன்குமார் கூறிய கதை பிடித்ததால் உடனடியாக தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஏஆர் முருகதாஸ். இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் புதுமுக நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தெரிகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் கவுதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படத்தை ஏஆர் முருகதாஸின் அசோசியேட் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். தற்போது ஏஆர் முருகதாஸ் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் வேலை காரணமாக தன் கல்யாண பேச்சுவார்த்தையை கௌதம் கார்த்திக் தற்போது தள்ளி வைத்திருக்கலாம் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.