பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் உலகிலேயே ஒரு நாட்டின் அரசு கவிழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கஜகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், அந்த போராட்டத்தில் மக்கள் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பது, அரசு பணியாளர்களின் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற காட்சிகள் வலய தளங்களில் உலாவி வந்த நிலையில், மக்களின் ஆவேசமான போராட்டத்திற்கு பணிந்த அந்நாட்டு பிரதமர் அஸ்கர் மாவின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகில் வாகன எரிபொருளின் விலை உயர்வை முன் வைத்து ஒரு நாட்டின் அரசு கவிழ்ந்திருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கது.