மறைந்த பிரபல நடிகர்
‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரனின் மருமகளும் , நடிகர் ஹம்சவிர்தனின் மனைவியுமான சாந்தி எனும் ரேஷ்மா மரணம் !
பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) நேற்று காலமானார்.
இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு இன்று ,மதியம் 2:30மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
மறைந்த சாந்தி ஹம்சவிர் தன் , நிஷா@ ரேஷ்மா என்ற பெயர்களில் மு.களஞ்சியம் இயக்கிய “பூமணி”படத்தில் இரண்டாவது நாயகியாகவும், நடிகர் கார்த்திக் உடன் “கிழக்கு முகம்”என்கிற படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார் ரேஷ்மா எனும் சாந்தி. அவ்வாறு ஒரு படத்தில் நடித்த போது தான் நடிகர் ஹம்சவிர்தனுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கி நடிகர் ஹம்சவிர்தனின் மனைவியாக குடும்பம் குழந்தைகள் நலம்… என வாழ்ந்து மறைந்துள்ளார். இறைவா , என்று அடங்குமோ ? இந்த கொரோனாவின் கோரதாண்டவம் .?!