நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இன்று இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளி மாவட்ட மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிற பகுதியிலிருந்து சென்னை வருபவர்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றிரவு 8 மணிக்கு பிறகு புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெருங்கும் நிவர் புயலால் சென்னையில் பிரதான சாலைகள் மூடபட்டுள்ளது.
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது நிவர் புயல்.
பலத்த மழை, சூறாவளி காற்று வீசும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.