2021ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளாராக யார் என்பது தொடர்பான பிரச்சினை கடந்த சில நாட்களாக நீடித்தது.
இதனால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு குழுக்களாக மோதல் நீடித்து வந்தது.
முதல்வர் பழனிசாமி தனது ஆதரவாளர்களுடனும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வந்தனர்.
இதனால் தமிழக அரசியல் பரபரப்பு களமானது. இவர்களின் மோதலை டெல்லியும் கவனித்து வந்தது.
இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என அதிமுக அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.
அதன்படி முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு காலையிலேயே வந்தார்.
பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் கட்சி தலைமை அலுவலகம் வந்தார்.
இதன்பின்னர் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.
அதன்பின்னர் 11 பேர் இடம் பெற்ற. வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
• திண்டுக்கல் சீனிவாசன்
• தங்கமணி
• எஸ்.பி வேலுமணி
• ஜெயக்குமார்
• சிவிசண்முகம்
• காமராஜ்
• ஜேசிடி பிரபாகர் – முன்னாள் எம்.எல்.ஏ
• மனோஜ் பாண்டியன்
• பா மோகன் – முன்னாள் அமைச்சர்
• ரா. கோபால கிருஷ்ணன் முன்னாள் எம்.பி
• கி மாணிக்கம் – சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ
ADMK Chief Minister Candidate announcement OPS EPS clash over