நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்ன் அடுத்த புதிய பரிமாணம் –
“எடிட்டிங் கலை” பயிற்சி இனிய தொடக்கம்
அனைவருக்கும் அன்புடன் வணக்கம்.
எங்கள் குழுமத்தின் புதிய வரவாக “ஆர்ட் ஆஃப் எடிட்டிங்” பயிற்சி வகுப்பை புதிதாக தொடங்குவதற்கான செய்திக்குறிப்பைக் கண்டறியவும்.
“நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்” குழுமம் என்றாலே தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை . ஏனெனில் “நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்” ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து நெஞ்சே எழு, இளையராஜாவின் லைவ் இன் கச்சேரி சிங்கப்பூர், வாய்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ், மடை திறந்து போன்ற சினிமா தொடர் கச்சேரிகள் மற்றும் நடிகர் விஜய சேதுபதியுடன் இணைந்து நம்ம ஊரு ஹீரோ, சூர்யா சூப்பர் சிங்கர் மற்றும் மிக சமீபத்தில் இளையதளபதி விஜய்யின் “மாஸ்டர்” ஆடியோ வெளியீடு போன்ற நேரடி நிகழ்ச்சிகளினால் நம்முடைய “நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்” பிராண்ட் பிரபலம் . தற்போது ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்காக , எடிட்டிங் பயிற்சி கொடுக்க ,நாம் தமிழக அரங்கில் அடியெடுத்து வைக்கிறோம் , அதில் சேர்வதற்கு ஆர்வமுள்ளவர்களை வரவேற்று அவர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல எடிட்டர்களை உருவாக்கி உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் பெருமை கொள்கிறோம்.
‘ஆர்ட் ஆஃப் எடிட்டிங்’ என்பது உலகெங்கிலும் வளர்ந்து வரும் எடிட்டர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் வகையில் பயிற்சியளிப்பதற்கான புதிய படியாகும். இன்றைய சூழ்நிலையில், இந்த கட்டத்தில் இந்த பாடத்திட்டத்தைத் தொடங்குவது ஏராளமான ஆர்வலர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் , சமீபத்திய நுட்பங்களை புதுப்பித்து மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் அறிவையும் , திறமையையும் மேம்படுத்துவதற்கு பயனளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் படிப்புகளுக்கு தலா 2 தனித்தனி நேரம் ஒதுக்கீடு செய்து வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் பைனல் கட் புரோ எக்ஸ், பிரீமியர் புரோ மற்றும் ஃபோட்டோஷாப் ஆகியவை அடங்கும்.
ஆர்வமுள்ளவர்கள் எங்களை +91 9176130643 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது connect@noiseandgrains.com இல் எங்களுடன் விரைவாக தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி
நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்