5 வருட உழைப்பு நிச்சயம் வெற்றி பெரும் – இயக்குநர் பிரகபல் நெகிழ்ச்சி

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப்பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் மற்றும் ரிதான் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .

இயக்குநர் பிரகபல் பேசும் போது..

“எல்லோருக்கும் வணக்கம், இந்த அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் போஸ்ட், புரொடக்‌ஷ்ன, என மூன்று ஸ்டேஜ்களிலும் நிறைய வேலை இருந்தது. மேலும், படம் நல்லா வந்ததிருக்கிறது என்றால் அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன. ஆக்‌ஷுவலா இந்த படத்தில் எடிட்டிங். கேமரா, மியூசிக், CG உள்பட டெக்னிக்கல் வொர்க் அதிகம். நிறைய 14 கேமராக்கள் வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இது என்னோட பர்ஸ்ட் ப்ராஜெக்ட் இது. ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன். நீங்கள் நல்ல சப்போர்ட் செய்து படத்தை வெற்றிபெற செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். படத்தின் நடிகர்கள், எடிட்டர், டயலாக் ரைட்டர், மியூசிக் டைரக்டர், சினிமாட்டோகிராபர், vfx டீம் என எல்லோரும் ரொம்ப நல்லா வொர்க் பண்ணிருக்காங்க.. அனைவருக்கும் நன்றி” என்றார்.

டயலாக் ரைட்டர் RP பாலா பேசியவை :

எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்திற்கு வாய்ப்பு தந்த கார்த்திக் அண்ணாவுக்கு நன்றி. இயக்குநரை முதலில் சந்தித்த போது ரா புட்டேஜை காட்டினார். நான்கு வருடம் கஷ்டப்பட்டு இந்தப் புராஜெக்டை உருவாக்கி இருக்கிறார்கள். எடிட்டர் ஜான் லோகேஷ் ராட்சசன் படத்தில் மிரட்டி இருந்தார். அந்தப் படத்தை விட இந்தப்படத்தில் அதிகமாக உழைத்திருக்கிறார். எல்லோரும் மிகச் சிறப்பாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கேஜிஎப் மியூசிக் டைரக்டர் மிரட்டி இருக்கிறார். ட்ரைலர் எந்தளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கோ.. அதே பிரமிப்பு படத்திலும் இருக்கிறது” என்றார்

நடிகர் அஜித் கோஷி பேசியவை,
எனக்கு இது மாலிவுட்ல பர்ஸ்ட் படம். நான் படத்தில் சின்ன ரோல் தான் பண்ணிருக்கேன். இந்த கேரக்டரை இயக்குநர் ஒரு மானிட்டரில் ப்ரீப்பா காட்டினார். அதனால் படத்தில் என் கேரக்டருக்காக நன்றாக தயாராக முடிந்தது. எல்லோரும் நன்றாக சப்போர்ட் செய்யுங்க. நன்றி” என்றார்.

எடிட்டர் சான் லோகேஷ் பேசியவை,

மட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.ராட்சசன் படம் முடித்த பின் எனக்கு மாலிவுட்ல இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. எதை ஓ.கே செய்வது என்ற யோசனையில் இருந்தேன். இயக்குநர் மட்டி படத்தின் கதையைச் சொன்னபோது எனக்கு அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது.இந்தப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். அப்போது ஷுட் செய்த ஃபுட்டேஜை காட்டினார்கள். இந்தப்படம் ரொம்ப சேலஞ்சாக இருக்கும் என்று நினைத்தேன். வொர்க் பண்ணவும் ரொம்ப இன் ட்ரெஸ்டாக இருந்தது. இயக்குநரிடம் கொஞ்சம் டைம் கொடுத்தால் நன்றாக பண்ணலாம் என்று சொன்னேன். இயக்குநர் நிறைய டைம் கொடுத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. 5 மொழியில் படம் வந்திருக்கிறது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கண்டிப்பா படம் எல்லோருக்கும் புடிக்கும்னு நம்புறேன்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *