“தி ஸ்மைல் மேன்” (The Smile Man) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

தயாரிப்பாளர் சலீல் தாஸ் பேசியதாவது….
இது தயாரிப்பில் என் முதல் தமிழ்ப்படம், முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் சுரேஷ் மேனன் பேசியதாவது…

ஸ்மைல் மேன் நல்ல படம், அனைவருக்கும் பிடிக்கும் திரையரங்கு வந்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை சிஜா ரோஸ் பேசியதாவது…
சரத்குமார் சாருடன் அவரது 150 வது படத்தில் நடித்தது மிகப் பெருமையாக உள்ளது. இப்படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இதற்கு முன்னாடி என்னை நிறைய ஹோம்லி கேரக்டராகத் தான் அழைப்பார்கள். இப்படத்தில் சரத்குமார் சார் டீமில் இன்வஸ்டிகேடிவ் செய்யும் பெண்ணாக நடித்துள்ளேன். என்னை இந்த கேரக்டரில் நடிக்க வைத்ததற்கு நன்றி. எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் சரத்குமார் பேசியதாவது…

இந்தப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்தார். நன்றி. பிரவீன், ஷ்யாம் மேடையில் கூட ஒன்றாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஒற்றுமைக்கு இது தான் சான்று. அவர்களுக்கு வாழ்த்துகள். ஒளிப்பதிவாளர் விக்ரம் திறமையானவர். எழுத்தாளர் ஆல்கெமிஸ் புத்திசாலி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ராகவன் சார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் நன்றி. குழுவினர் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். நல்ல முயற்சி. சுரேஷும் நானும் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் இதை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர். நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *