மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்;

தயாள் பத்மநாபன் இயக்கத்தில், ஆரவ், வரலக்ஷ்மி சரத் குமார், சந்தோஷ் பிரதாப், அமித் பார்கவ், சுப்ரமணிய சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் “மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்”.

கதைப்படி,

வேலை முடித்து வீடு திரும்பும் மஹத், சிறுமியை ஒரு கும்பல் கடத்தி செல்கிறது. அதை பார்க்கும் அவர், மாருதி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் அமித்திடம் தகவல் தெரிவிக்கிறார்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் மஹத் மற்றும் அமித். சுப்ரமணிய சிவா தலைமையிலான கும்பலை பார்க்கின்றனர். ஆனால், இன்ஸ்பெக்டராக அமித், சுப்ரமணிய சிவாவுக்கு நண்பர் என்பதால் மஹத்தை கொலை செய்கின்றனர்.

இதை அறிந்த மஹத்தின் நண்பர்களான, வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், யாசர் மற்றும் விவேக் ராஜ கோபால்.

இன்ஸ்பெக்டர் அமித் மற்றும் சுப்ரமணிய சிவாவை இருவரையும் பழி வாங்க திட்டம் தீட்டுகின்றனர். அந்த திட்டம் சரியாக நடந்ததா? ஆரவ் எதற்காக இந்த வழக்கை விசாரிக்க வந்தார்? ஆரவ் யார்? என்ற பல திருப்பங்களை கொண்டது தான் படத்தின் இரண்டாம் பாதி.

வரலக்ஷ்மியின் தோற்றம் போலீஸ் பாத்திரத்திற்கு பொருந்த வில்லை. மேலும், அவர் திட்டம் தீட்டும் காட்சி, நண்பனை கொன்ற அமித்தை கோபத்துடன் பார்க்கும் காட்சி, கிளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சி என அனைத்து காட்சிகளிலும் ஸ்கொர் செய்து அசத்தியுள்ளார் வரலக்ஷ்மி.

கதாபாத்திர வலு இருக்கும் ஒரு கதையை தேர்வு செய்து நடிக்கும் பட்சத்தில் மிகுந்த வரவேற்பை பெறுவார் சந்தோஷ் பிரதாப்.

மிடுக்கான போலீசாக வந்து மிரட்டியுள்ளார் ஆரவ். கம்பீரமான தோற்றம், உயர் அதிகாரிக்கேற்ற உடல் மொழி என இரண்டாம் பாதி முழுவதையும் தன் வசம் வைத்துக் கொள்கிறார்.

சின்ன ஒன் லைன் வைத்து சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

பல சிறப்பான நடிகர்கள் இருக்கும் ஒரு படத்தில் அனைவர்க்கும் சமமான ஒரு பாத்திர வலு கொடுத்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

மானிகாந்த் கத்ரியின் இசை, படத்தின் த்ரில்லர் கதைக்கு தேவையான சுவாரஸ்யத்தையும், பரபரப்பையும் தக்க வைத்து படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – பெஸ்ட் க்ரைம் த்ரில்லர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *