டி3 திரைவிமர்சனம் – (3/5)

பிரஜின், வித்யா பிரதீப், காயத்ரி யுவராஜ், சார்லி, ராகுல் மாதவ், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில், ‘பீமாஸ் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில், மனோஜ் எஸ் தயாரிப்பில் உருவான படம் தான் ‘டி 3’. இப்படத்தை பாலாஜி எழுதி, இயக்கியுள்ளார்.

3 பாகங்களாக உருவாகியுள்ள ‘டி 3’ படத்தின் கடைசி பாகம் வெளியாகியுள்ள நிலையில், இதன் முந்தைய 2 பாகங்கள் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கதைப்படி,

காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரியும் பிரஜின், தனது மனைவி வித்யா பிரதீப்புடன், பணி மாறுதல் காரணமாக குற்றாலம் வருகிறார். அங்குள்ள டி 3, காவல் நிலையத்தில் பணியேற்கிறார். அப்போது, அவரது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில், இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகிறார்.

இதனை விசாரிக்கும் பிரஜின், கடும் அதிர்ச்சியாகிறார். அதன்பிறகு அவரது தீவிர விசாரணையில் குற்றவாளியை நெருங்குகிறார். இதனால், அவரது மனைவி கொல்லப்படுவதுடன், பிரஜின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதிலிருந்து பிரஜின் தப்பித்தாரா? குற்றவாளியை பிடித்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை..

ப்ரஜினின் நேர்த்தியான நடிப்பு கொடுத்து கதையின் பாத்திரத்தையும், பாத்திரத்தின் வலியையும் நமக்கு உணர்த்தியுள்ளது.

வித்யா பிரதீப் மற்றும் சார்லி அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். உடன் நடித்த கலைஞர்கள் நல்ல நடிப்பை கொடுத்திருந்தாலும், அமேச்சூர் நடிப்பு ஆங்காங்கே எட்டி பார்க்கிறது.

முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லாமல் ஸ்பீட் பிரேக்கர் போட்டது படத்தின் திரைக்கதை ஸ்லோ ஆனதற்கு காரணமாகியுள்ளது.

மெடிக்கல் க்ரைம் பற்றிய ஒரு சப்ஜெக்டை இயக்கியுள்ள பாலாஜிக்கு வாழ்த்துக்கள்.

க்ரிஸ்பி கட்ஸுடன் படத்தொகுப்பு செய்துள்ள ராஜாவுக்கு தனி பாராட்டுக்கள்.

ஸ்ரீஜித் இசை படத்தின் ஓட்டத்திற்கு பலமாக அமைத்துள்ளது.

டி 3 – டீசென்ட் த்ரில்லர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *