ரித்திகா சிங், சந்தீப் கோயட், மனிஷ் ஜான் ஜோலியா நடிப்பில், ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இன் கார்.
கதைப்படி,
தங்கையை ஊரில் இருக்கும் ஒருவர் காதலித்தார் என்பதற்காக, அந்த நபரை கொலை செய்துவிட்டு ஜெயிலிருந்து பெயிலில் வெளியில் வருகிறார் மனிஷ்.
அவரை ஜெயிலிருந்து வேறு இடத்தில் தலைமறைவாக வைப்பதற்காக அவரின் அண்ணனும், மாமாவும் பவான் என்ற இடத்திற்கு அழைத்து செல்கின்றனர். போகும் வழியில், பெண்ணாசை காரணம் காட்டி ஒரு பெண்ணை கடத்த வேண்டுமென மனிஷ் கூற அவரின் மாமாவும் ஒப்புதல் தெரிவிக்கிறார்.
அதன் பின், ரித்திகா சிங் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்ட ரித்திகா சிங் என்ன ஆனார்? என்பது மீதிக்கதை.
ரித்திகா சிங் நடிப்பதற்கான இடம் இப்படத்தில் இல்லை. அழுதால், ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் பேசினால் போதுமானது.
மனிஷ் கதாபாத்திரம் தான் இருப்பதில் ஒரு மோசமான பாத்திரம். அவரை பார்க்கும் போதெல்லாம் கோபமும் அருவெறுப்பும் தான் நம் மனதில் இருக்கும். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் சரியான தேர்வு.
சந்திடேப் கொயட், சுனில் சோனி, ஜியான் பிரகாஷ் கொடுத்த பாத்திரத்தை சிறப்பா செய்துள்ளனர்.
இயக்குனர் ஹர்ஷ் வரதனின் கதைக்களமே தவறு. ஒரு பெண்ணை காதலித்தால் தவறு என்ற மனநிலையோடு கொலை செய்யும் ஒருவன், தனது குடும்ப கௌரவம் முக்கியம் என்று நினைக்கும் ஒருவன். ஒரு பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்ய திட்டமிடுவானா? என்பதே கேள்விக்குறி. அதிலும் அபத்தமான காட்சிகள் அதிகம்.
இப்படி பட்ட சர்ச்சையான கதையை எடுக்கும் முன்னாள் சரியான திட்டமிடல் இருந்திருக்க வேண்டும். மேலும், 100 நிமிட படமே நம்மை சோர்வடைய செய்யும் திரைக்கதை. சொல்ல வந்தது வேறு, சொன்னது வேறு என குழப்பத்துடன் படத்தை இயக்கியுள்ளார் ஹர்ஷ்.
இன்கார் – நோ கமெண்ட்ஸ்