விஷால் நடிப்பில், ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் “லத்தி”. இப்படத்தை தயாரித்ததோ ரமணா மற்றும் நந்தா என்ற இருவர் தான். அவர்களை உயிர் நண்பர்களாக நினைத்து பழகி வந்தார் விஷால். ஆனால், அப்படி பட்ட நண்பனை ரமணா மற்றும் நந்தா ஏமாற்றிய கதை தான் இது.
விஷாலும் இரண்டு நண்பர்களும்:
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விஷால்-ரமணா-நந்தா மூவரும் நண்பர்கள்.
நந்தாவுக்கு ஆரம்ப காலத்தில் சில படங்கள் வாய்ப்பு வந்தாலும் பின்னர் பட வாய்ப்பின்றி நடிக்காமல் பீல்ட் அவுட்டாக இருந்தார் நந்தா. அதன் பின் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார் அவர். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சர்வைவர்” ஷோ மூலம் அவரின் சுய ரூபத்தை மக்களுக்கு வெளிக்காட்டி ஒரு நெகட்டிவ் கேரக்டராக மக்களிடத்தில் பதிவானார் நந்தா.
ரமணா நடித்ததோ “கைதி” படத்தில் மட்டும் தான். ஆனால், அவரின் தந்தை சினிமா துறையை சேர்ந்ததனால் அவருக்கு விஷாலுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானார்.
லத்தியும் நம்பிக்கை துரோகமும்:
இத்தனை ஆண்டுகள் இருவரும் நம்முடன் இருக்கிறார்களே, அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக சம்பளமின்றி “லத்தி” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஷால். ரமணா மற்றும் நந்தா தான் தயாரிக்க வேண்டுமென அழுத்தம் திருத்தமாக கேட்டுக்கொண்டதும் விஷால் தான்.
ஆனால், விஷாலுக்கு சம்பளம் பேசாவிட்டாலும் முதற்கட்டமாக 2 கோடி, அதன் பின் 2 கோடி, அதன் பின் 1 அரை கோடி, அதன் பின் 50 லட்சம் என 6 கோடி ரூபாயை சம்பளமாக விஷாலுக்கு கொடுக்கிறது ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.
விஷால் மற்ற கம்பெனிகளுக்கு படம் நடித்தால் அவர் வாங்கும் சம்பளம் 20 முதல் 25 கோடி. ஆனால் நண்பர்களுக்காக 6 கோடி மட்டுமே வாங்கியுள்ளார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.
லத்தி படம் ரிலீஸ் ஆவதற்கு முன் 1.75 கோடி ரூபாய் FEFSI ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் அதை கடனாக கொடுக்குமாறு ரமணா மற்றும் நந்தா இருவரும் விஷாலிடம் கேட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஆர்டிஸ்ட்களுக்கும் 2.5 கோடி பாக்கி உள்ளது என்றும் கேட்டுள்ளது ராணா புரொடக்ஷன்ஸ் தரப்பு. மேலும், லத்தி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விற்பனை செய்த பணம் இன்னும் தனியார் தொலைக்காட்சியிடமிருந்து வரவில்லை. அது வந்தவுடன் பணத்தை திருப்பி செலுத்துகிறோம் என்று விஷாலிடம் நம்பிக்கை தெரிவித்தது ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.
எனவே நண்பர்களுக்கு உதவ நினைத்த விஷால். அவர் அடுத்து நடிக்கும் “மார்க் ஆண்டனி” பட தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் தொகை 2 கோடி பெற்று நண்பர்களின் கடனை தீர்த்திருக்கிறார் விஷால். அது மட்டுமின்று அவர் சம்பளமாக வாங்கியிருந்த பணத்திலிருந்தும் 1.5 கோடி ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார்.
விஷால் அனுப்பிய 2 கோடி ரூபாய் மொத்தமும் வங்கி பரிவர்த்தனைகள் என்பதாலும் அவர் நேரடியாக FEFSI தொழிலாளர்களுக்கு செட்டில் செய்ததாலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியும் இவர் பக்கமே திரும்புகிறது.
இது மட்டுமின்றி, படம் திரையிட QUBE மற்றும் UFO போன்ற நிறுவனங்களிடம் விஷால் நேரடியாக கோரிக்கை வைக்கிறார். அதாவது, இப்போது எங்களால் பணம் கட்ட முடியவில்லை சிறு கால அவகாசம் வேண்டும். தனியார் தொலைக்காட்சியிடமிருந்து பணம் வந்தவுடன் பணத்தை ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கொடுக்கும் என்றும் விஷால் கேட்டுக் கொண்டதால் நம்பிக்கையின் அடிப்படையில் படத்தை திரையிடுகிறது QUBE நிறுவனம்.
QUBE நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை 1.5 கோடி.
எனவே படம் வெளியான சில நாட்களுக்கு பின் விஷால் தரப்பினர் எங்களுக்கு மொத்த தொகை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தனியார் தொலைக்காட்சி கொடுத்த 3.5 கோடி பணத்திலிருந்து 1.5 கோடி ரூபாயாவது கொடுக்கவும் என கேட்கிறது விஷால் தரப்பு.
அத்துடன் பண மூட்டையை தூக்கிக் கொண்டு கோயமுத்தூர் சென்று செட்டிலானவர் தான் நந்தா. ரமணாவோ ஜாலியாக CCL கிரிக்கெட் போட்டியில் விளையாட வடநாட்டிற்கு சென்றுவிட்டார்.
பிளேஷ் பேக் ஸ்டோரி:
விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்ற போது, அதற்கு முன் செயல்பட்ட நிர்வாகிகள் வைப்பு நிதியாக விட்டுச்சென்ற தொகை மொத்தம் 7 கோடி.
ஆனால், விஷால் பொறுப்பேற்ற பின் அவருடன் இருந்த நண்பர்களான ரமணா மற்றும் நந்தா சங்கத்தை “DEVELOP” செய்யலாம் என்று ஆசை காட்டி 7 கோடியை மோசம் செய்து சங்கத்தை செயல்படாமலும் விஷாலுக்கு அவப்பெயரையும் உண்டு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களின் வாழ்க்கையை உயர்த்த நினைத்து தற்போது ஏமாளியாக இருக்கிறார் விஷால். பணத்தை தாண்டி நண்பர்கள் செய்த துரோகம் தாங்க முடியாததால் யாரிடமும் பேசாமல் உடன் இருக்கும் சிலரையும் அவாய்ட் செய்கிறாராம் விஷால்.
இச்செய்தி குறித்து ரமணா மற்றும் நந்தாவிடம் நமது இளஞ்சூரியன் குழு பேச முயற்சி செய்து வருகிறது. அவர்களின் தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் விரைவாக இளஞ்சூரியனில் பதிவு செய்யப்படும்.