யாரடி நீ மோஹினி, குட்டி, உத்தம புத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, மதில், திருச்சிற்றம்பலம் என வெற்றிப்பட இயக்குனரான மித்ரன்.ஆர்.ஜவஹர் தற்போது மாதவனை வைத்து இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மாதவன் மற்றும் மித்ரன்,ஆர்.ஜவஹர் இணையும் இப்படத்தை மீடியா ஒன் நிறுவனம் தயாரிக்கிறது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மித்ரன் பதிவு செய்திருந்த டீவீட்டில், “திருச்சிற்றம்பலத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, திறமையான மற்றும் ரசிகர்களின் விருப்பமான நடிகரான மாதவனுடன் எனது அடுத்த படத்தை தொடங்குகிறேன். மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
After the blockbuster success of Thiruchitrambalam, kicking off my next directorial project starring uber-talented, and fan-favourite @ActorMadhavan. Produced by the acclaimed Mediaone Global Entertainment. Let's Roll! 🔥@Mediaone_M1 @sharmilamandre
— Mithran R Jawahar (@MithranRJawahar) February 11, 2023