மாடர்ன் லவ் சென்னையின் அறிமுகத்தை ப்ரைம் வீடியோ அறிவிக்கிறது;

டைலர் டுர்டென் மற்றும் கினோ ஃபிஸ்டின் பேனரின் கீழ்தயாரிக்கப்பட்ட , மாடர்ன் லவ் சென்னை இந்திய சினிமாவின் ஆறு புத்திசாலி படைப்பாளிகளை ஒன்றிணைத்திருக்கிறது – பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா

இந்த தொடருக்கான இசையமைப்பாளர்களில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் உள்ளடங்குவர், பாடல்கள் மேஸ்ட்ரோ இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளது.

இந்த அமேசான் ஒரிஜினல் தொடரின் முதல் காட்சி இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றம் பிராந்தியங்களில் மே 18, 2023 அன்று வெளியிடப்படும்.

இந்தியாவின் மிகவும் நேசிக்கப்படும் பொழுதுபோக்கு தளம் ப்ரைம் வீடியோ, அதன் வரவிருக்கும் தொகுப்பு தொடர் மாடர்ன் லவ் சென்னையின் உலகளாவிய வெளியீட்டை அறிவித்தது. இது மாடர்ன் லவ் மும்பை மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத்தை தொடர்ந்து , ஜான் கார்னே தலைமைத் தாங்கிய சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற ஒரிஜினல் தொகுப்பான மாடர்ன் லவ்வின் மூன்றாவது இந்திய தழுவல் ஆகும். தியாகராஜன் குமாரராஜாவை படைப்பாளியாக கொண்டு, டைலர் டுர்டென் மற்றும் கினோ ஃபிஸ்ட் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட , ஆறு –அத்தியாய தொகுப்பு வலிமையாக கவர்கின்ற மற்றும் தனித்தன்மையான காதல் கதைகளின் ஒரு பூங்கொத்தாக வழங்குகிறது, இவை உறவுகளை ஆய்வு செய்கின்றன, எல்லைகளைக் கடக்கிறது மற்றும் மனங்களைத் திறக்கிறது. மாடர்ன் லவ் சென்னை, ப்ரைம் மெம்பர்ஷிப்பிற்கு சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ப்ரைம் உறுப்பினர்கள், வருடத்திற்கு ரூ 1499 என்ற விலையில் ஒரே மெம்பர்ஷிப்பில் சேமிப்புகள் , சௌகரியம், மற்றும் பொழுதுபோக்கை அனுபவிக்கிறார்கள்.

இந்த தொகுப்பு பின்வரும் அத்தியாயங்களை உள்ளடக்குகிறது:

1 “லாலாகுண்டா பொம்மைகள்” – ராஜுமுருகன் இயக்கியது, இசையமைப்பு ஷான் ரோல்டன் , ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.

2 “இமைகள்” – பாலாஜி சக்திவேல் இயக்கியது, இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா, அசோக் செல்வன், மற்றும் டீ.ஜே பானு ஆகியோர் நடித்துள்ளனர்.

3 “காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி” –கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்கியது, இசையமைப்பு ஜி.வி.பிரகாஷ் குமார், ரித்து வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

4.“மார்கழி” – அக்ஷய் சுந்தர் இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

5.“பறவை கூட்டில் வாழும் மான்கள் ” – பாரதிராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , கிஷோர், ரம்யா நம்பீசன், மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

6.“நினைவோ ஒரு பறவை” – தியாகராஜன் குமாரராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , வாமிகா மற்றும் பீபி ஆகியோர் நடித்துள்ளனர்.

“மாடர்ன் லவ் மும்பை மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின், நல்ல -பாராட்டைப் பெற்ற சர்வதேச ஃப்ரான்சைஸ், மாடர்ன் லவ்வின் மூன்றாவது இந்திய பதிப்பை கொண்டுவருவதில் நாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். உலகளவில் கவரக்கூடிய உள்ளூரில் வேரூன்றிய கதைகளைக் கொண்டு வருவதற்கு ப்ரைம் வீடியோவில், நாங்கள் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார் அபர்ணா புரோஹித் , இந்திய ஒரிஜினல்ஸ் தலைவர் , அமேசான் ப்ரைம் வீடியோ. “மாடர்ன் லவ் சென்னை , காதல் உணர்வின் நுணுக்கங்கள் மற்றும் சிக்கல்களுடன் கைக்கோர்த்து, காதலை அதன் அனைத்து அழகு, மகிழ்ச்சி, மற்றும் பெருமையுடனும் கொண்டாடுகிறது மற்றும் ஆய்வு செய்கிறது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நுணுக்கங்களை ஆய்வு செய்யும் , இதயத்திற்கு –இதமளிக்கும் இந்த கதைகளைச் சொல்வதற்கு தியாகராஜன் குமாரராஜா மற்றும் மற்ற அனைத்து வியத்தகு இயக்குநர்களுடன் ஒருங்கிணைவது அற்புதமானதாக இருந்திருக்கிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *