தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது “தக்ஸ்”. ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..

இயக்குநர் பிருந்தா பேசுகையில்,
“ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார். பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ஆர்.கே. சுரேஷ் சார் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர். இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை, அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன்.

நடிகர் முனிஷ்காந்த் பேசுகையில்,

“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. உறுதுணையாக இருந்த பாபி சிம்ஹா சார், தேனப்பன் சார், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. ஹிருது இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் ஹிருது ஹாரூன் பேசுகையில்

“இந்த வாய்ப்பை வழங்கிய பிருந்தா மேடத்திற்கு நன்றி. படத்தில் வசனங்கள் கம்மியாக உள்ளது, ஆனால் சாம் சிஎஸ் உடைய இசை நிறையப் பேசுகிறது. படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இப்படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் பிப்ரவரி 24, 2023 வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *