கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK 21 படப்பிடிப்பு துவக்கம்;

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் (SPIP) தயாரிக்க பன்முகத் திறமை கொண்ட நடிகரான சிவகார்த்திகேயன், மற்றும் சிறந்த நடிகையான சாய் பல்லவி இணைந்து நடிக்கும் #SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குனர் – ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டெஃபன் ரிக்டர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். மேலும் இத்திரைப்படத்தை காட் ப்ளஸ் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.

#SK21 பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் நம் தேசத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பேசும் படமாக இது இருக்கும். அதிரடி ஆக்‌ஷன்களுடன் புதுமையான கதைக் களத்தில் பயணிக்கும் #SK21 ரசிகர்களுக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் உலகநாயகன் கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், இணை தயாரிப்பாளர்  வக்கீல்  கான், பொது மேலாளர் மற்றும் தலைவர் (SPIP) லாடா  குருதேன்  சிங், மற்றும் RKFI தலைமை செயல் அதிகாரி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்ட பிரமாண்டமான விழாவுடன் தொடங்கியது. படப்பிடிப்பு காஷ்மீரில் அடுத்த 60 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *