“அயலி” ஒரு பொழுது போக்கு தொடர் அல்ல – அமைச்சர் அன்பில் மகேஷ்;

பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. ZEE5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே. நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி இணையத் தொடர் பெண்ணடிமைத்தனத்தை அழுத்தமாக பேசி, பெண் கல்வி மீது புதிய ஒளி பாய்ச்சியது. திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் பெரும் பாரட்டுக்களை குவித்தது. இத்தொடரை பள்ளிகளில் திரையிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அழுத்தமாக கோரிக்கை வைத்தனர்.

தற்போது அந்த வகையில் முதல் முன்னெடுப்பாக ZEE5 தளம் மூலம், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக அயலி இணையதொடர் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இந்த திரையிடலில் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பை சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.

 

இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ், முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே. நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவ்விழாவினில் ZEE5 தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி திரு. சிஜு பிரபாகரன், ZEE5 நிறுவன தலைமை அதிகாரி கௌசிக் நரசிம்மன், அயலி தொடரின் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி இயக்குநர் முத்துக்குமார், நடிகை அபி நட்சத்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது…
அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு முதலில் இந்த இணையத்தொடருக்காக ZEE5 நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இது ஒரு பொழுது போக்கு தொடர் அல்ல, நாம் பெண்ணடிமைத்தனத்தில் எந்த இடத்திலிருந்து இப்போதைய நிலைக்கு வந்துள்ளோம் என்பதற்கு சான்றாக இந்த தொடர் உருவாகியுள்ளது. கல்வி என்பது ஆண் பெண் என பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவுத்திட்டம் முதலாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் பெரியார் அண்ணா கலைஞர் காலங்களில் பெண்ணுரிமைக்காக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். இதனை மிக அழகாக இந்த தொடர் சித்தரித்துள்ளது இதனை உருவாக்கிய குழுவிற்கும் நடித்த நடிகர் நடிகையர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *