ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடித்து வரும் படம் ‘கோப்ரா’. ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இர்ஃபான் பதான் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தலைப்பையும், விக்ரமையும் இணைக்கும் விதமாக அவரது கதாபாத்திரம் இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். அதற்கேற்ப முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதும், விக்ரமின் கதாபாத்திரம் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், வருகிற ஏப்ரல் 17-ம் தேதி ‘சியான்’ விக்ரமின் பிறந்தநாள் வருகிறது. அன்று அவர் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் அல்லது மோஷன் போஸ்டர் இதில் ஏதாவது ஒன்று வெளியாகும். முதல் பார்வை போஸ்டர் போலவே டீசரும் சிறப்பாக இருக்குமென ரசிகர்களிடையே ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
‘சீயான்’ விக்ரமின் மகன் விக்ரம் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சீயான் விக்ரமிற்கு ரசிகர்கள் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.