‘அன்டில் டான்’ திரை விமர்சனம்

*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்

*அன்டில் டான் (Until Dawn)*

‘அன்டில் டான்’ என்பது சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட ஒரு சுவாரசியமான ஊடாட்ட திகில் விளையாட்டாகும். இந்த விளையாட்டு ஒரு பட்டாம்பூச்சி விளைவு முறையைப் பின்பற்றுகிறது. இதில் வீரர்கள் அவர்கள் எடுக்கும் தேர்வுகளைப் பொறுத்து உயிர்வாழ்வார்கள் அல்லது இறப்பார்கள். வீரர்கள் தங்கள் நகர்வுகளை மூன்றாவது நபரின் கோணத்தில் செய்ய வேண்டும். அப்படியான நகர்வு, மர்மத்தைத் தீர்க்க அவர்களுக்கு உதவும். இப்படம், அந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் F. சாண்ட்பெர்க் இந்த திகில் படத்தை இயக்கியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான அன்டில் டான் என்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு, அவ்விளையாட்டுக் களத்தில் அமைக்கப்பட்ட ஒரு தனித்த கதையைக் கொண்டுள்ளது இப்படம். அவ்விளையாட்டுத் தொடரின் தொன்மவியலை ஆராயும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது அன்டில் டான் திரைப்படம். க்ளோவரும் (எல்லா ரூபின்) மற்றும் அவரது தோழிகளும், க்ளோவரின் சகோதரி மெலானி (மையா மிட்செல்) காணாமல் போன தொலைதூர பள்ளத்தாக்குக்குச் செல்கிறார்கள். அவர்கள் ஒரு நேர சுழற்சியில் (Time loop) சிக்கிக் கொண்டிருப்பதை உணர்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் ஓரே கனவைக் காண்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறொரு புதுக் கொலைக்காரனை நேரிடுகிறார்கள். இச்சுழற்சியில் இருந்து தப்பிக்க அவர்கள் விடியும் வரை உயிர் பிழைத்தாக வேண்டும்.

*CREDITS*

இயக்கம்- David F.Sandberg

நடிகர்கள்-Michael Cimino, Odessa A’Zion, Jio-young Yoo & Belmont Cameli

ஒளிப்பதிவு- Maxime Alexandre

படத்தொகுப்பு-Michel Aller

இசை – Benjamin Wallfisch

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *